

சிக்கலான அறிவியல் விசயங்களையும் எளிய தமிழில் புரியும்படி விளக்குவதில் முன்னோடியாகத் திகழ்பவர் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன். பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் சிறந்த அறிவியல் ஆசிரியரான வெங்கடேஸ்வரன், நிகழ்காலத்தில் தமிழகத்தின் மிகச் சிறந்த அறிவியல் எழுத்தாளர் ஆவார்.
கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தமிழகமெங்கும் பயணம் செய்து, ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்களிடம் அறிவியல் கருத்துகளைப் பிரச்சாரம் செய்து வருகிறார். சிறந்த அறிவியல் பேச்சாளராகவும் திகழும் வெங்கடேஸ்வரன், ‘ஆரியப்பட்டரிலிருந்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வரை: ஈர்ப்பு விசை சுருக்கமான வரலாறு’ என்ற தலைப்பில் அண்மையில் எழுதியுள்ள ஒரு நூல் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.