

இலக்கியம், தன்னை ஒவ்வொரு விதத்திலும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. உள்ளடக்கம், கதை சொல்லும் முறையில் இருந்து பல்வேறு விதங்களில் இந்த மாற்றங்கள் நடக்கின்றன. அதை, வாசகர்கள் சரியாக உணர்கிறார்களா? என்பது அவர்களின் அனுபவத்தைப் பொறுத்தது.
ஆனால், விமர்சகர்களின் வேலை அதைச் சரியாக வெளிக் கொணர்வது. பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரி உதவிப் பேராசிரியர் இரா. அந்தோணி ராஜ், தனது விமர்சனம், ஆய்வுக் கட்டுரைகளின் வழி அதைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார்.