

தமிழர் வாழ்வில் ஒன்றுகலந்த பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று, பிரிக்க முடியாத ஒன்று இசை. ஆனால், குறிப்பிட்ட வகையில் மட்டுமே பாடப்படக்கூடிய, சற்றே கடினமான இலக்கணத்தைக் கொண்ட இசைதான் உயர்ந்தது என்கிற கண்ணோட்டத்துடன் சாதாரண மக்களிடம் இருந்து இசை தள்ளி நிறுத்தப்பட்டிருந்தது.
கலைகளுக்கு அப்படி எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை, ரசிப்பதுபோலவே அனைவரும் பாடலாம் என்கிற நம்பிக்கையை யும் அதற்கான குழுக்களையும் பரவலாக்கிச் சேர்ந்திசை வடிவத்தைப் பிரபலமாக்கியவர் இசை மேதை எம்.பி.சீனிவாசன். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரான அவரைத் தமிழ்த் திரையுலகம் கொண்டாடாவிட்டாலும், மலையாளத் திரையுலகம் வாரி அணைத்துக்கொண்டது.