

மார்க்சியச் சிந்தனையாளரான எஸ்.வி.ராஜதுரையின் சமீபத்திய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். மொழி பற்றிய விவாதங்கள் நடந்துவரும் இச்சமயத்தில் இந்த நூலின் தலைப்புக் கட்டுரை, மொழி பற்றிய விசாலமான பார்வைவை முன்வைக்கிறது.
ஆனால், இந்தக் கட்டுரையின் பொருள், நடப்பு அரசியலிலிருந்து வேறுபட்டது. மொழி பற்றிய எஸ்.வி.ஆரின் துணிபு இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. விலங்குகள் தொடர்புச் சாதனமாகப் பயன்படுத்தும் ஓசையில் தொடங்கி மொழி பற்றிய சிந்தனைகளை ஒழுங்குபடுத்துகிறார் அவர்.