

இடதுசாரி கொள்கைகளும் இயக்கங்களும் காலங்காலமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இந்த நூல் அதன் காரணாகாரியங்களைத் தேடி தர்க்கபூர்வமான விமர்சனத்தை ஆழமாக முன்வைக்கிறது. பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் ஆகிய கருத்தாக்கங்களிலிருந்து இந்த நூலை அரவிந்தன் நீலகண்டன் விரிவாகத் தொடங்குகிறார்.
ஜெர்மானிய அறிஞர் ஃப்ரடரிக் ஹெகல், தன் தத்துவ வாசிப்பின் வழி இருப்பை முரண்படும் இரட்டைகளாக அறிந்தார். இந்த முரண்படும் இரட்டைகள் என்கிற அம்சத்தைத்தான் காரல் மார்க்ஸ் சுவீகரித்துக்கொண்டார் என நூலாசிரியர் மதிப்பிடுகிறார்.