கற்பனை அலைகள்எஸ்.ராமகிருஷ்ணன்தேசாந்திரி பதிப்பகம்விலை: ரூ.180தொடர்புக்கு: 044 23644947உலக இலக்கியங்களைப் பற்றியும் உலக இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் தனது ஆழமான புரிதலை இந்தக் கட்டுரைத் தொகுப்பின் வழி எஸ்.ராமகிருஷ்ணன் முன்வைக்கிறார். .சொல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவேசெ.மன்னர் மன்னன்அறம் பதிப்பகம்விலை: ரூ.130தொடர்புக்கு: 9150724997.தனது அனுபவங்களை, வாழ்க்கை குறித்த தனது புரிதலை சில வரிகளுக்குள் கவிதையாக்க முயன்றுள்ளார் கவிஞர். இவை எல்லாமும் அமைதி, பேச்சு ஆகிய பொருளில் அமைந்துள்ளன.அந்திச்சுழியம்எஸ்.சண்முகம்போதிவனம்விலை: ரூ.200தொடர்புக்கு: 98414 50437.கவிதைகள் குறித்து அதிகம் பேசியும் எழுதியும் வரும் எஸ்.சண்முகத்தின் கவிதைகள் இவை. தமிழின் சந்த மரபின் தொடர்ச்சியைப் போல இந்தக் கவிதைகள் வெளிப்பட்டுள்ளன. .பத் மஸ்ரீ கலைஞர்களுக்குப் பாராட்டு | திண்ணை: பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட கூத்துக் கலைஞர் கண்ணப்ப சம்பந்தன், பறையிசைக் கலைஞர் வேல் முருகன் ஆகிய இருவருக்கும் நாளை (23.02.25) பிற்பகல் 3 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகப் பவளவிழாக் கலையரங்கில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. பிரளயன், அம்ஷன் குமார், வெளி ரங்கராஜன், பேரா.வீ.அரசு, பேரா. கோ.பழனி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல ஆ ளுமைகள் கலந்துகொண்டு வாழ்த்துகிறார்கள்.திரு மூலர் இரா.முருகனுக்கு பஞ்சுப் பரிசில்: ஆண்டுதோறும் பேராசிரியர் க.பஞ்சாங்கம் பெயரில் வழங்கப்படும் பஞ்சுப் பரிசில் விருதுக்கு திருமூலர் இரா.முருகன் தே ர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் எழுதிய ‘திருமூலரியம்’ நூலுக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விருது ரூ.10,000 பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் உள்ளடக்கியது.