

மனிதனின் வாழ்க்கைப் பருவங்களில் முதுமைப் பருவம் என்கிற ஒன்று மட்டும் இல்லாது போயிருக்கக் கூடாதா என்று பல நேரங்களில் நினைப்பதுண்டு. கூன்விழுந்த பாட்டியையோ, தடியூன்றித் தள்ளாடி நடக்கும் தாத்தாவையோ நாள்தோறும் பார்த்துவிட வேண்டியதாக இருக்கிறது.
வயிற்றுப்பசிக்காகவும் வேறு சில சொற்பத் தேவைகளுக்காகவும் பரிதவிப்போடு தெருக்களில் எதிர்படும் இவர்களைப் பார்க்கும்போதும் யாராவது உதவ மாட்டார்களா என்று ஏக்கத்தோடு கையேந்தி நிற்கும் இவர்களைக் காணும்போதும் அவர்கள் மீதான பரிதாபம், இரக்கம் எல்லாவற்றையும் கடந்து நாளை நமக்கும் இப்படித்தானே என்ற நடக்கும் என்கிற மெல்லிய பயம் மனதைக் கவ்விக்கொள்கிறது.