

கவிஞர் குட்டி ரேவதியின் நேர்காணல்களின் ஒவ்வொரு உரையாடலும் அவருடன் நேரடியாக அமர்ந்து கேட்கும் அனுபவத்தை அளிப்பதுடன் அவரது படைப்புலகில் இதுவரை நாம் பிரவேசிக்காத இடங்களைத் தெள்ளத் தெளிவாக்குகிறது.
கவிதை குறித்த உரையாடலொன்றில் ‘‘கவிதை வெளியிலிருந்து கிடைக்கும் ஒரு கருவின் வழியாக உருவாவதில்லை. புறவெளியையும் சேர்த்த அனுபவத்தில் உள்ளிருந்து எழுவது’’ என்கிறார். அதிலிருந்து அவரது கவிதைகளின் வீரியமும், மொழியும் எதனால் உண்டானது என்று கண்டுகொள்ள முடிகிறது.