

நூறாண்டுகளுக்கு முன் அதாவது 1924 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் சமூகநீதிக்காக இரண்டு முக்கியப் போராட்டங்கள் நிகழ்ந்தன. ஒன்று வைக்கத்தில் சிவன் கோயில் தெருவில் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் நடக்க அனுமதி கோரி நடைபெற்றது.
அது பெரியாரால் வெற்றிப் பாதைக்குக் கொண்டு போகப்பட்டது. இரண்டாவது சேரன்மாதேவி குருகுலத்தில் சமத்துவமான உணவு பரிமாறலுக்காக நடந்தது. டாக்டர் வரதராஜூலுவும் பெரியாரும் இணைந்து நிகழ்த்தியது. இவற்றுள் வைக்கம் போராட்டத்துக்கான நூற்றாண்டு விழாவினைத் தமிழ்நாடு அரசும் கேரள அரசும் முன்னெடுத்தன. வேண்டிய அளவு இல்லையாயினும் நடக்கவில்லை என்று சொல்ல முடியாதபடி நிகழ்ந்து முடிந்தது.