

இந்தியாவின் முக்கியமான பிரதமர்களில் ஒருவர் நரேந்திர மோடி. தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் இந்தியாவின் சக்தி வாய்ந்த பிரதமராக அரியணை ஏறியிருக்கிறார். மோடியின் அரசியல் வாழ்க்கையையும் அறியாத தனிப்பட்ட வாழ்க்கையையும் இந்த நூல் அலசி ஆராய்ந்துள்ளது. இதன் வழி பெரும்பான்மையானோர் அறியாத தகவல்கள் நம்மால் அறிய இந்த நுல் வழிகோல்கிறது.
மோடியின் சொந்த ஊரான வாட்நகர் பற்றிய சித்தரிப்பில் இந்த நூல் தொடங்குகிறது. குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவடத்தில் அமைந்துள்ள ஊர் இது. இந்த ஊரின் அருமை பெருமைகளையும் இந்த நூல் கூறுகிறது. மோடியின் தாய், தந்தையரையும், உடன் பிறந்தோரையும் புகைப்படங்கள் வழியாக அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.