

பொதுவாக மணி விழா என் றால் மணிவிழா தம்பதியின் உறவினர்கள், குடும்ப நண்பர்கள் கூடி, அவர்களின் ஆசிர்வாதத்தி னைப் பெறுவார்கள். ஆனால் சமீ பத்தில் நடந்த விஜய சோமசேகர சிவாச்சாரியாரின் மணி விழாவில் அவரிடம் படித்த சீடர்களும் சிவாச்சாரியார்களும் சேர்ந்து, பெரிய சைவ ஆகமக் கருத்தரங்கம் ஒன்றையே நடத்திவிட்டனர்.
‘ஆகம - கல்ப - த்ரும - உத்ஸவம்’ என்ற பெயரில் கடந்த சனிக்கிழமை, சென்னை, மேற்கு மாம்பலத்தில் இருக் கும் பாணிக்கிரஹா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், நான்கு அமர்வுகளில் 20 தலைப்புகளில் 40 அருளாளர் களின் சிவ ஆகமத்தை ஒட்டிய தலைப்புகளில் அமைந்த கருத் துரைகள் கேட்பவரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தின.
திருக்கோயில்களில் கடைப் பிடிக்கப்படும் பூஜை நியமங் களுக்கு ஆதாரமாக இருப்பவை ஆகமங்கள் ஆகும். காமிகம், யோகஜம், சிந்த்யம், காரணம், அஜிதம் உள்ளிட்ட சிவனால் அரு ளப்பட்ட சைவ ஆகமங்கள் 28 உள் ளன.
சைவ ஆகமங்களை ஆலயங் களில் பயன்படுத்தும் விதம், அதன் பயன்கள், நோக்கங்கள் போன்றவை குறித்தும் இந்தக் கருத்தரங்கத்தில் விரிவாக விளக் கப்பட்டன.
தமிழகம் திருக்கோயில்கள் நிறைந்த மாநிலம் என்பதால், இக்கருத்தரங்கத்தில் பேசப்பட்ட விஷயங்கள் வேதாகம பாட சாலைகளில் பயிலும் எண்ணற்ற மாணவர் களுக்கும், பக்தர் களுக்கும் பயன் அளிக்கும் நிகழ்ச்சியாக அமைந்தது. தமிழ கத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆந்திரம், கர்நாடகம் போன்ற வெளி மாநிலங்களில் இருந் தும் வந்திருந்த சிவாச்சாரியார் கள் இந்த நிகழ்வில் பங்கேற்ற னர்.
சைவ ஆகமங்களில் நகர நிர்வாகம், தனிப்பட்ட மனித ஒழுக்கம், வானவியல் சாஸ் திரம், கட்டிட நிர்மாணம், ரசாயன சாஸ்திரம் போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன. இதில் சைவ ஆகமங்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதை சிவாச்சாரியார்கள் விளக்கி கூறினர்.
நிகழ்ச்சியில் ‘சிவ பாத பத்ம பூஷணம்' எனும் விருதை சோமசேகர சிவாச்சாரியாருக்கு, பல்வேறு பாடசாலைகளில் முதல் வர்களாக இருப்பவர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ‘சிவாகம நல்மொழிப் பூங்கொத்து', ‘நற்கூற்று மணி மாலை' ஆகிய சோமசேகர சிவாச்சாரியார் எழுதிய நூல்களும் வெளியிடப் பட்டன. 'யசோமாலிகா' என்ற பாராட்டு மலரும் வெளியிடப் பட்டது.
டம்மீஸ் ஜூலை நாடக திருவிழா இன்று தொடக்கம்
ஸ்ரீதியாக பிரம்ம கான சபையின் ஆதரவுடன் டம்மீஸ் ஜூலை நாடகத் திருவிழா சென்னை, தியாகராய நகர், வாணி மகாலில் இன்று முதல் ஜூலை 22 வரை நடக்கவிருக்கிறது.
ரசிகர்களின் ரசனையை உயர்த்தும் நாடகக் குழு என்னும் சிறப்பை பெற்றிருப்பது டம்மீஸ் டிராமா. மேடையிலும் அரங்க நிர்மாணத்திலும் 50 பேர் ஈடுபட்டிருக்கும் இந்தக் குழுவின் உறுப்பினர்களாலேயே நாடகத் துறையில் தன்னிகரற்ற சிறப்பை டம்மீஸ் தயாரிப்பில் உருவாகும் நாடகங்கள் பெறுகின்றன.
நாடகம் என்னும் கலையின் மீது கொண்ட காதலால் ஸ்ரீவத்ஸன், ஸ்ரீதரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரின் முயற்சியால் தொடங்கப்பட்டது டம்மீஸ் டிராமா குழு.
20-வது ஆண்டில் அடி எடுத்துவைக்கும் கொண்டாட்டத்தை கடந்த ஜனவரி மாதம் சென்னை, ஆர்.ஆர்.சபாவில் தொடங்கியது இந்தக் குழு. கல்வி, விருந்தோம்பல், மருத்துவம், அறிவியல், கணிதம், பக்தி இப்படி பல தலைப்புகளில் இருக்கும் நல்ல கருத்துகளையும் பிரச்சாரத் தொனியில் இல்லாமல் தன்னியல்பில் நாடகத்தில் கொண்டு வருவதுதான் டம்மீஸ் குழுவினர் நாடகத்தின் சிறப்பு.
இன்று தொடங்கவிருக்கும் டம்மீஸ் ஜூலை திருவிழாவில் ’பரிக்ஷை’ நாடகம் முதலாவதாக அரங்கேறவிருக்கிறது.
அதைத் தொடர்ந்து கனவு மெய்ப்பட (ஜூலை 21), நகர் வந்திருந்தார், கபாலா அண்ட் நெக்ஸ்ட், நெக்ஸ்ட், நெக்ஸ்ட் ஆகிய குறுநாடகங்கள் (ஜூலை 22, மாலை 4-30), வலை (மாலை 7) ஆகியவை அரங்கேறவிருக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு: www.dummiesdrama.com