

உலகளாவிய புதிய அனுபவங்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் தனித்துவமான பங்கை ஈழ எழுத்துகள் செய்து வருகின்றன. யுத்தத்தையும் அகதி வாழ்வையும் எழுதாத ஈழ எழுத்தாளர் ஒருவரைக்கூட காட்ட முடியாது. யுத்தத்தின் ஆரம்ப காலத்தல் புலம் பெயர்ந்த ஈழ எழுத்தாளர்கள் புலத்தில் வாழ்ந்த பொழுதும் தாய்நாட்டுக் கதைகளையே எழுதி வந்தனர்.
அந்த நிலை இன்று மாறிப் புலத்து வாழ்வும் ஈழ எழுத்தில் ஊடுருவி கலந்துவிடத் தொடங்கி உள்ளது. தமிழுக்கு இது ஒரு அகில உலகப் பரிமாணத்தை வழங்கி உள்ளது. பரந்த தளம் புதிய மொழி நடையையும் அவாவி நிற்கிறது. எழுத்தாளர்கள் பலர் இந்தப் பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அனோஜன் பாலகிருஷ்ணனின் முதலாவது நாவல் ‘தீக்குடுக்கை’ இதன் இன்னொரு பரிமாணத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.