

இலக்கியம், மெய்யியல், கோட்பாடுகள் ஆகியவை குறித்து ஜமாலன் எழுதிய பத்து கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ‘தமிழ்ச் சிறுவாரி மரபும் உடலரசியல் முதலீடுகளும்’, ‘நவீன தமிழ் இலக்கியத்தில் தேசிய, திராவிட, இடதுசாரிச் சொல்லாடல்களும், மரபுகளும்’, ‘தமிழ் நவீனத்துவ மரபில் பாரதியும் பாரதிதாசனும்’ உள்ளிட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
பொதுப்புத்தி சார்ந்து அறியாமையில் தனது அறிவு மறுப்புவாதத்தையே பின்நவீனத்துவம் எனத் தமிழ்ச்சூழல் முன்வைக்கிறது என்று கூறும் ஜமாலன், தமிழ்ச்சூழலில் எது புரியவில்லையோ அதுவே பின்நவீனத்துவம் என்பது பொதுப்புத்தி சார்ந்த புரிதலாக உள்ளது என்கிறார்.