

தமிழ் நாவல் உலகில் புதிய எழுத்தாளர்களின் சஞ்சாரம் அதிகரித்துவரும் காலக்கட்டம் இது. சொல்லப்படாத வாழ்க்கையை மானுடவியல் பதிவாகச் சொல்லும் போக்கும் நாவல்களில் ஒரு தன்மையாக மாறிவருவதற்குச் சாட்சியாகவும் சில நாவல்கள் வெளிவந்துள்ளன.
லத்தீன் - அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியப் பாதிப்பில் இளம் எழுத்தாளர்கள் மனத்திரள்களை நாவலாக்கும் போக்கும் இப்போது நடந்துவருகிறது. சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளிவந்துள்ள நாவல்கள் இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவை. இவற்றில் கவனம் பெற்ற சில நாவல்களைப் பற்றிய அறிமுகக் குறிப்புகள் இவை.