

ஏறக்குறைய நானூறு ஆண்டுக் கால சென்னையின் நதிமூலத்தை நம் கண்முன் நிறுத்துகிறது மா.சு.சம்பந்தன் எழுதியிருக்கும் `சென்னை மாநகர்' என்னும் இந்நூல். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நம் எல்லோரையுமே தகவல் பணக்காரர்களாக்கியிருக்கிறது.
ஆனால், அதுபோன்ற எந்த வசதியும் இல்லாத காலத்தில் இந்நூலினை எழுதியிருக்கும் மா.சு.சம்பந்தன் எத்தனை புத்தகங்களைப் படித்திருப்பார், எவ்வளவு குறிப்புகளை எடுத்திருப்பார், எத்தனை இடர்களை எதிர்கொண்டிருப்பார் என்பதை இந்நூலில் இடம்பெற்றிருக்கும் மலைப்பான தகவல்கள், நம்மை எண்ண வைக்கின்றன.
தோற்றுவாய், வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றுக் காலம், சுற்றுப்புறத்து ஊர்கள், 15, 16ஆம் நூற்றாண்டின் சூழ்நிலை, ஆங்கிலேயர் வருகை, ஆட்சிக் காலம், நகர வளர்ச்சி, சென்னையின் சிறப்பு - என ஒன்பது தலைப்புகளில், முறையே பண்டைய சென்னையின் தொன்மையான வரலாறு துலக்கமான ஆவணமாக இந்நூலில் வெளிப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகர்
மா.சு.சம்பந்தன்
விலை: ரூ.250
தொடர்புக்கு : 7401296562
வெளி அரங்கில் இன்று... புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (11.01.25) மாலை 6 மணி அளவில் ‘மன முறிவும் மண முறிவும்’ என்கிற தலைப்பில் வெ.இறையன்பு ஐஏஎஸ் உரையாற்றவுள்ளார். இதைத் தொடர்ந்து ‘இனிக்கும் இல்லறம்’ என்கிற தலைப்பில் சுந்தர ஆவுடையப்பன் உரையாற்றுகிறார். பபாசி துணை இணைச் செயலாளர் எம்.சாதிக் பாட்சா வரவேற்புரையும் பபாசி செயற்குழு உறுப்பினர் ஆர்.சங்கர் நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.