

ஆங்கில இலக்கியத்தின் தலைவாசலாகக் கருதப்படுவர் வில்லியம் ஷேக்ஸ்பியர். அவரது நாடகங்களின் பாதிப்பில் பல நாவல்கள், திரைப்படங்கள் உருவாகியுள்ளன. மனித மனங்களுக்குள்ளே விநோதமான சஞ்சாரத்தை நடத்துபவர் என ஷேக்ஸ்பியரைச் சொல்லலாம். ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற ஐந்து நாடகங்களைக் கதை வடிவில் மோகன ரூபன் தமிழில் பெயர்த்துள்ளார்.
ஷேக்ஸ்பியர் 1601இல் எழுதிய ‘பன்னிரண்டாவது இரவு’ என்கிற நாடகம், வயோலா, செபஸ்டின் ஆகிய இரட்டையர்களின் கதையைச் சொல்கிறது. கப்பல் விபத்துக்குள்ளாக அதில் உயிர் பிழைத்த வயோலா தனது அடையாளத்தை மறைத்து ஒரு ஆணாக ஒலிவியா என்கிற பிரபு குமாரியிடம் வேலைக்குச் சேர்கிறார். ஒலிவியாவை ஒருதலையாகக் காதலிக்கும் ஆர்சினோ என்கிற பிரபு ஒருவர் இருக்கிறார். ஆர்சினோவுக்காக மாறுவேடத்தில் ஆணாக இருக்கும் வயோலா தூது செல்கிறார்.