

நமது கிராமப்பகுதிகளில் சிறுதெய்வங்களைப் பற்றி நிறைய கதைகள் புழக்கத்தில் இருக்கின்றன. அப்படியொரு தெய்வம்தான் நம் கதையில் வரும் கன்னியாயியும். கன்னியாயிகள் கிராமங்கள் தோறும் இருந்தாலும் அவை அனைத்தும் மாரியம்மன்போல ஒரே மாதிரியானவை அல்ல.
பிறப்பால் அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகளைப் பின்புலமாகக் கொண்டவை. இந்தக் கதையில் வரும் கன்னியாயி மிகவும் ஆக்ரோஷமான காவல் தெய்வம். காவல் தெய்வம் என்பதால் ஊர் மொத்தத்தையும் காக்கும் என நினைத்துவிடக் கூடாது. இது ஊரில் பூப்பெய்தும் பெண்களுக்கு மட்டும் காவலாக நிற்கும் தெய்வம்.