

நூல் அட்டை வடிவமைப்பு, ஒரு காலக்கட்டம் வரை தனித் துறையாக இல்லை. உள்ளடக்க வடிவமைப்பாளர்களே அட்டைகளையும் வடிவமைப்பார்கள். பிரசித்திபெற்ற தொடர்கள், தனி நூல்களாக வரும்போது, ஓவியர்கள் அவற்றுக்கான அட்டையை வரைவார்கள்.
நவீனக் கவிதையைப் போல் மறை முகமாகப் பொருளை உணர்த்துவது அட்டை வடிவமைப்பிலும் வரத் தொடங்கியது. இன்றைக்கு அட்டை வடிவமைப்பே தனிக் கலையாக உருவெடுத்துள்ளது. மணிவண்ணன், தில்லை முரளி, சந்தோஷ் நாராயணன், ரோஹிணி மணி, நெகிழன் என வடிவமைப்பாளர்கள் இன்று உருவாகியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் லார்க் பாஸ்கரன்.