

ஆய்வாளர் பழ.அதியமான் ‘இந்து தமிழ் திசை’ தலையங்கப் பக்கத்தில் எழுதிவந்த ‘அற்றைத் திங்கள்’ தொடரின் நூலாக்கம் இது. கடந்த காலத்தின் படிப்பினைகளை உள்வாங்கிக்கொண்ட முதிர்ச்சியோடு, தற்காலச் சமூக நடப்புகளை எளிமையும் இலக்கிய அழகும் வாய்ந்த நடையில் பதிவுசெய்துள்ளது இந்த நூலின் சிறப்பம்சம். சமகால நிகழ்வுகளை அவற்றுடன் தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகளோடு கோத்து, சுவைபட எழுதப்பட்டுள்ளன. அன்னி பெசன்ட், பெரியார் ஈ.வெ.ரா, திரு.வி.க. போன்ற ஆளுமைகளை வாசகர்கள் இன்னும் அருகில் சென்று புரிந்துகொள்ள நூலின் சில கட்டுரைகள் உதவுகின்றன.
நேற்று நடந்த பாதை
பழ.அதியமான்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 74012 96562