

சாகாவரம்
ய.லக்ஷ்மி நாராயணன்
அல்லயன்ஸ் பதிப்பகம்
விலை: ரூ.140
தொடர்புக்கு: 044 2464 1314
குமாரஸ்வாமி என்பவரின் கதையை எளிய மொழியில் இந்த நாவல் கூறுகிறது. சமூக, குடும்ப உறவுகள் குறித்தும் இந்த நாவல் நுட்பமாகப் பதிவுசெய்கிறது.
கலகக் குரலாய் எழும் திரைமொழி
அ.இருதயராஜ்
சவுத் விஷன் புக்ஸ்
விலை: ரூ.220
தொடர்புக்கு: 94453 18520
‘பரியேறும் பெருமாள்’, ‘அசுரன்’, ‘டூலெட்’, ‘அநீதி’ உள்ளிட்ட பல முக்கியமான திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
பூமிப்பந்து சந்தித்திராத போராட்டங்கள்
இரா.ஜோதி
வீரா பதிப்பகம்
விலை: ரூ.240
தொடர்புக்கு: 89036 31454
விவசாயிகள் நடத்திய போராட்டத்தைப் பற்றிய நூல். அந்தப் போராட்டத்தின் பல நிலைகளை இந்த நூல் விவரிக்கிறது.
ஈழத்து மின்னல்கள்
நெறியாளுகை: இரா.அறவேந்தன்
பதிப்பாசிரியர்: இ.சு.அஜய்சுந்தர்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
விலை: ரூ.170
தொடர்புக்கு: 044 2625 1968
பேராசிரியர்கள் அருணாசலம் சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோரின் தமிழியல் பங்களிப்பு குறித்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
கதிரியக்கம்
அரு. தாணுமாலயன்
நெல்லி பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 98402 21753
கதிரியக்கம் குறித்து முழுமையாகப் பதிவுசெய்யும் நூல் இது. அறிவியல் குறித்து எளிய தமிழில் நூலாசிரியர் இதில் விவரித்திருக்கிறார்.