

பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லாப்பியே, அமெரிக்க எழுத்தாளர் லாரி காலின்ஸ் (ஜான் லாரன்ஸ் காலின்ஸ்) ஆகிய இருவரும் இணைந்து எழுதிய ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ நூலைத் தழுவி நிகில் அத்வானி இயக்கியிருக்கும் வெப் சீரிஸ் (Freedom At Midnight) ‘சோனி லிவ்’வில் வெளியாகியிருக்கிறது.
ஏழு அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடர், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கான காரணங்களையும் அப்போதைய மத, சமூக, அரசியல் நிகழ்வுகளையும் பற்றிப் பேசுகிறது. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் இது வெளியாகியிருக்கிறது.
எழுத்தும் நடிப்பும்: திரைப்படங் களுக்குத் திரைக்கதை எழுதுவதோடு நாடகங்கள், குறும் படங்கள், சுயாதீனப் படங்களில் நடித்தி ருக்கும் எழுத்தாளர் ஷோபாசக்தி, நவம்பர் 29 அன்று வெளியாகும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் நடித்திருக்கிறார்.
42ஆவது சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே தமிழ்ப்படமான ‘செங்கட’லில் அதன் இயக்குநர் லீனா மணிமேகலை, சி.ஜெரால்டு ஆகியோருடன் இணைந்து திரைக்கதையிலும் பங்களித்திருக்கிறார். 2015 ‘கான் திரைவிழா’வில் ‘பாம் தி ஓர்’ விருது வென்ற ‘தீபன்’ படத்தில் ஷோபசக்தி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.