சென்னையில் ‘எழுத்துலா’
எழுத்துரு உருவாக் கத்திலும் மொழி சார்ந்த தொழில்நுட்பத்திலும் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்மிக்கவர் முத்து நெடுமாறன். முரசு அஞ்சல், செல்லினம் போன்றவை இவர் உருவாக்கியவையே. இந்திய, இந்தோ - சீன வரிவடிவங்களுக்கு இவர் உருவாக்கிய எழுத்துருக்கள் ஆப்பிள், ஆண்ட்ராய்டு, எம்.எஸ். விண்டோஸ் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்களிடையே புழக்கத்தில் உள்ள பல்வேறு எழுத்து வடிவங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் ‘எழுத்துலா’வை நடத்தவிருக்கிறார்.
சென்னையில் ஒரு தெருவைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள சுவர்களிலும் ஆட்டோ, லாரி போன்ற வாகனங்களிலும் எழுதப்பட்டிருக்கும் எழுத்து வடிவங்களைக் குழுவாகச் சேகரிக்கவிருக்கிறார்கள். இதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கில் ‘Type Tiffin’ எனும் நிகழ்ச்சியை நவம்பர் 23 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடத்தவிருக்கி றார்கள். எழுத்துரு வடிவமைப்பில் ஆர்வ முள்ளவர்கள் மட்டுமல்லாமல் தமிழ் எழுத்து களில் பல்வேறு வடிவங்களைப் பார்க்க விரும்புகிறவர்களும் இதில் பங்கேற்கலாம்.
நிகழ்ச்சியில் பங்கேற்க: https://shorturl.at/Sg6cN
புத்தகத்திலிருந்து திரைக்கு: 20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இரண்டு லத்தீன் அமெரிக்க நாவல் களை உலக ரசிகர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் அவற்றைப் படமாகவும் தொடராகவும் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தயாரித்திருக்கிறது. ஜுவான் ரூல்ஃபோவின் ‘பெட்ரோ பரோமா’ நாவலின் தழுவல் படமாக (Pedro Paramo) வெளிவந்திருக்கிறது. காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்ஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் 16 அத்தியாயங்கள் கொண்ட தொடராக (one hundred years of solitude) வெளிவரவிருக்கிறது.
