

திருக்குறள் (கலைஞர் உரை)
அருணா வெளியீடு
விலை: ரூ.200
தொடர்புக்கு: 94440 47790
குறளுக்குப் பலரும் உரை எழுதியுள்ளனர். மு.கருணாநிதியின் இந்த உரை இக்காலத் தேவையை உணர்ந்து எழுதப்பட்டது என நன்னன் கூறுகிறார்.
பெளத்த மறுமலர்ச்சி முன்னோடிகள்
க.ஜெயபாலன்
பாபாசாகேப் அம்பேத்கர்
கலை இலக்கியச் சங்கம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 98847 44460
தமிழில் பெளத்தத்தை ஏற்று அதன் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தலைவர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பரவலாக அறிமுகம் இல்லாத ஆளுமைகளையும் இந்த நூல் பட்டியல் இடுகிறது.
நீர் மேலாண்மை
ஜெகாதா
அருணோதயம் பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.320
தொடர்புக்கு: 72008 36063
பண்டைய காலம் தொட்டு தமிழ்நாட்டின் நீர் மேலாண்மை எப்படி இருந்தது என்பதை இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.
தையல்நாயகி
புதுவை புவனா
புதுவை புவனா வெளியீடு
விலை: ரூ.150
தொடர்புக்கு: 75984 75851
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சமூகப் பங்களிப்பைச் சொல்லும் சிறார் நாவல் இது. கெங்கையம்மா பாட்டியின் வழி சுவாரசியம் காட்டியிருக்கிறார் எழுத்தாளர்.
பெரியவர் தோழர் தமிழரசன்
பெ.சிவசுப்ரமணியம்
சிவா மீடியா
விலை: ரூ.350
தொடர்புக்கு: 94434 27327
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத் தோழர் தமிழரசன் குறித்த நூல் இது. அவரது வாழ்க்கையுடன் விடுதலைப் போராட்டப் பாதையையும் பகிர்கிறது இந்த நூல்.