Published : 30 Jun 2018 10:03 AM
Last Updated : 30 Jun 2018 10:03 AM

நல்வரவு: சேலம் மாவட்ட நடுகற்கள்

வாழ்ந்து மறைந்த முன்னோர்களைக் காலத்தால் மறந்துவிடாமல், நடுகல்லாய் நிறுத்தி வணங்கிய பெருமைக்குரியது தமிழ்ச் சமூகம். காலப்போக்கில் நடுகல் வழிபாடென்பதே வழக்கொழிந்துவிட்ட சூழலில் முந்தைய மரபார்ந்த செயல்களை வரும் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் வெளிவந்துள்ள வரலாற்று ஆவணமே இந்நூல். ஆத்தூர், மல்லூர், வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம், ஏற்காடு, ஓமலூர் என ஆறு வட்டாரங்களாகப் பிரித்து, மொத்தமுள்ள 53 நடுகற்களையும் படங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ள விதம் நன்று.

சேலம் மாவட்ட நடுகற்கள் (புதிய கண்டறிதல்கள்)

சேலம் வரலாற்று ஆய்வு மையம்

விலை - ரூ.250

சேலம் வரலாற்று ஆய்வு மையம், சேலம் - 636101

7010580752

தனது வாழ்க்கை அனுபவங்களைப் பிற கவிஞர்களின் நறுக்குத் தெறித்த கவிதைகளுடன் பொருத்தியும், தனது கவிதை அனுபவங்களுடன் பொருத்தியும் புதிய முறையில் விவரிக்கும் தொகுப்பு. கவிதை நூலா, கவிதைகள் குறித்த கட்டுரை நூலா, இலக்கிய விமர்சனமா, பயணக் கட்டுரையா, வாழ்க்கை வரலாற்று நூலா என வாசிப்பவர்களின் மனப்போக்கிற்கே விட்டுவிடுகிறார் இளங்கோ. கவிஞரை வளர்த்து விட்டவர்களோடு, கவிஞரால் வளர்த்துவிடப் பட்டவர்களையும் பதிவுசெய்திருப்பது இந்நூலின் சிறப்பு.

என்னோடு வந்த கவிதைகள்

பிச்சினிக்காடு இளங்கோ

விலை - ரூ.250

டிஸ்கவரி புக் பேலஸ்

கே.கே.நகர் மேற்கு, சென்னை - 600 078

9940446650

தற்கொலை செய்துகொள்ள முனைபவர்கள் சாக விரும்புகிறார்கள் என்கிற தவறான எண்ணம் நம்மிடம் இருக்கிறது. அவ்வாறு முயல்பவர்கள் அந்தச் சூழலிலிருந்து தங்களைக் காப்பாற்ற யாருமில்லையே என்கிற அழுத்தத்தில்தான் அப்படியான முடிவைத் தேடுகிறார்கள். அந்தச் சூழலிலிருந்து மீள வைக்கும் நம்பிக்கையூட்டும் எழுத்து, சின்னச் சின்ன கதைகளாக அனைவருக்கும் புரியும் நடையில் எழுதப்பட்டுள்ளது. மரணம் தேடி வருகையில் எதிர்கொள்ளும் ஆற்றலை வழங்கும்.

உச்சியிலிருந்து தொடங்கு

வெ.இறையன்பு

விலை - ரூ.175

விஜயா பதிப்பகம்

20, ராஜ வீதி, கோயம்புத்தூர் – 641001

0422-2382614

மத்திய அரசு ஊழியராக இருந்து பணி ஓய்வுபெற்றவுடன் தனது நெடுநாள் கனவான இந்நாவலை எழுதி வெளியிட் டிருக்கிறார் டெய்சி. இந்த நாவலில் மூன்று காதல் கதைகள் ஒரு புள்ளியில் இணைகின்றன. யாருமற்றவளாகத் தொடங் கும் வாழ்க்கைப் பயணத்தில் அன்பையும் பாசத்தையும் அள்ளிக் கொடுத்து, எண்ணற்ற மாந்தர்களைச் சொந்தமாகப் பெறுகிறாள், கதையின் நாயகி. கதைக்குள் கதையாகப் பின்னிப் பிணையப்பட்டுள்ள மூன்று முக்கோணக் காதல் கதைகள்.

உயிர்ப்பிக்கப்பட்ட கனவுகள்

டெய்சி ஜோஸப்ராஜ்

14, ஸ்ரீராம் நகர், திருவான்மியூர்

சென்னை - 41

விலை: ரூ. 605

9884087629

தொகுப்பு: மு.முருகேஷ், நீரை.மகேந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x