

ராஜ தந்திரம்
மாக்கியவெல்லி (தமிழில்: துளசி)
அல்லயன்ஸ் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9289281314
இத்தாலிய எழுத்தாளர் நிக்கோலோ மாக்கியவெல்லியின் புகழ்பெற்ற நாவலான ‘பிரின்ஸி’இன் தமிழ் மொழிபெயர்ப்பு இந்நூலாகும்.
இரவெல்லாம் வெயில்
கி.கவியரசன்
மெளவல்
பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9488840898
இயற்கையை வியக்கும் கவிதைகள், காதல் உணர்வையும் சொல்கின்றன. மிகவும் தன்வயமாக எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது.
ஒரு கோப்பைத் தேநீருடன் நீ
முகிலன் பெருமாள்
விஜயா பதிப்பகம்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 9047087053
தபூசங்கர் வரிசையில் காதலைப் போற்றும் கவிதைகள் இவை. வாசிக்கச் சுவாரசியம் கொண்டுள்ளன இந்தக் கவிதைகள்.
மண் சிவந்தது
மா.சாமுவேல்
மெக்சாண்ட்ரா பப்ளிகேஷன்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 9894098954
சமூக அக்கறையுள்ள ஓர் ஆசிரியரின் கொலையைத் துப்புத் துலக்கும் நாவல் இது. விறுவிறுப்பான நடையில் அதேவேளை ஆழமாக இந்தக் கதையை எழுத்தாளர் சொல்லியிருக்கிறார்.
பண்டிதர் அயோத்திதாசரும் மகா மதுர கவி வீ.வே.முருகேச பாகவதரும்
க.ஜெயபாலன்
பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம் வெளியீடு
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9884744460
அயோத்திதாசப் பண்டிதர், மதுர கவி வீ.வே.முருகேச பாகவதர் ஆகியோர் குறித்து இந்த நூலில் தனித் தனிக் கட்டுரைகள் உள்ளன. இருவரையும் ஒப்பிட்டும் கட்டுரைகள் உள்ளன.