

உலகக் குடிமகன்
நா.கண்ணன்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.240
தொடர்புக்கு: 044 4200 9603
நாட்டரசன்கோட்டையில் பிறந்து பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்த அனுபவத்தைப் பயன் தரும் வகையில் இந்த நூலில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
மழலையின் வளர்ப்பில் மரபும் சூழலும்
மருத்துவர் ப.வைத்திலிங்கம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
விலை: ரூ.170
தொடர்புக்கு: 044 2625 1968
இந்தியா அல்லது பல உலக நாடுகளில் குழந்தை வளர்ப்பில் கையாளும் முறைகளை நூலாசிரியர் அறிந்துகொண்டு, இங்கு அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என எழுதியுள்ளார்.
விஞ்ஞானிகள்
கோ.எழில்முத்து
சத்யா பதிப்பகம்
விலை: ரூ.60
தொடர்புக்கு: 044 4507 4203
கலிலியோ, ஐசக் நியூட்டன், சார்லஸ் டார்வின் போன்ற முக்கிய மாற்றங்களை உண்டாக்கிய அறிவியலாளர்களின் வாழ்க்கைச் சுருக்கம் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
இராஜ ராஜ சோழன்
ஜெகாதா
குமரன் பதிப்பகம்
விலை: ரூ.600
தொடர்புக்கு: 94440 13999
ராஜராஜ சோழனின் வரலாற்றைக் கல்வெட்டுகள் அடிப்படையில் திரட்டித் தரும் நூல் இது. 50 தலைப்புகளின் கீழ் சுவாரசியத்துடன் நூல் எழுதப்பட்டுள்ளது.
தீபாவளி மலர்:
இந்து தமிழ் திசை தீபாவளி மலர்
விலை: ரூ.175 தொடர்புக்கு: 99406 99401
பாரம்பரியமும் நவீனமும் இணைந்த கவிதையாக மலர்ந்திருக்கிறது இந்து தமிழ் திசை தீபாவளி மலர். மூன்று தசாப்தங்களைச் சேர்ந்த முகமறியா இசையமைப்பாளர்கள் பற்றிய கட்டுரை அரிய தகவல்களோடு வியக்கவைக்கிறது என்றால், படங்களுக்காகப் பாடல்களா, பாடல்களுக்காகப் படங்களா என்கிற விவாதம் விறுவிறு நடையால் ஈர்க்கிறது.
திருவாரூர் தங்கராசுவின் நூற்றாண்டையொட்டி வெளிவந்திருக்கும் கட்டுரை நல்லதொரு வரலாற்று ஆவணம். பிரபல எழுத்தாளர்கள் ஐந்து பேரின் வெளிவரவிருக்கும் நாவல்களில் இருந்து ஒரு பகுதியை வெளியிட்டிருப்பது புதுமை. தீபாவளியை நாம் கொண்டாடுகிற நேரத்தில், நமக்காக உழைக்கிறவர்கள் பற்றிய கட்டுரை, பயணக் கட்டுரைகள், பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள், அனுபவப் பகிர்வுகள் எனப் பக்கம்தோறும் புதுச்சுவையோடு மிளிர்கிறது தீபாவளி மலர்.
விகடன் தீபாவளி மலர்
விலை: ரூ.180
அட்டையில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு தோன்றும் எம்ஜிஆரில் தொடங்கி, பக்கங்கள்தோறும் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் கட்டுரைகளும் நேர்காணல்களும் அணிவகுக்கின்றன. ஆன்மிகம், கலை, இசை, இலக்கியம், சிறுகதை, கவிதை, நகைச்சுவை, சினிமா, வரலாறு எனப் பல்வேறு தலைப்பின்கீழ் அமைந்துள்ள கட்டுரைகள் வாசிப்புக்குச் சுவை கூட்டுகின்றன.
மணியம் செல்வனின் நேர்காணலைத் தொடர்ந்து முழுப் பக்க அளவில் இடம்பெற்றிருக்கும் அவர் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் பக்தி மணம் கமழ்கின்றன. 2கே கிட்ஸைக் கவரும் வகையில் இடம்பெற்றிருக்கும் இளம் பாடகர்கள் - ராப்பர்களின் நேர்காணல், காலத்துக்கேற்ற தீபாவளிப் பரிசு!