நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
1 min read

அலையும் வாழ்வும்
ஜெ.சுனில்
பாரதி புக் ஹவுஸ்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 99424 41751

கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளை மீனவக் கிராமத்தின் வரலாற்றை முழுமையாக விவரிக்கிறது இந்த நூல். அதன் பண்பாடு, நம்பிக்கைகள் எனப் பல அம்சங்களை இந்த நூல் கூறுகிறது.

கரை தாண்டும் நதிகள்
இரா.ம.செளந்தர்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.225
தொடர்புக்கு: 98409 52919

அன்றாட வாழ்க்கை குறித்த சுவாரசியமான கதைகள் கொண்ட தொகுப்பு இது. குடும்பம், காதல் எனப் பல உள்பொருள் கொண்ட கதைகளைத் தோள் மேல் கைபோடும் தொனியில் சொல்கிறது இந்நூல்.

பன்முக அறிஞர் அம்பேத்கர்
வீ.பழனி
அஆஇ பதிப்பகம்
விலை: ரூ.50
தொடர்புக்கு: 94433 91196

அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை அவரது சமூகப் பங்களிப்பின் வழி சொல்லும் நூல் இது. வரலாற்று நிகழ்வுகளில் அவர் ஆற்றிய பங்கு இந்த நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

பாரதியாரின் சுதேச கீதங்கள்
ரா.நிரஞ்சன் பாரதி
பாரதி பதிப்பகம்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 93839 82930

தமிழ் இலக்கியத்தில் உருவான நவீனத்துவத்துக்கு வித்திட்டவர் பாரதியார். அவரது கவிதைகள் நேரடித்தன்மை கொண்டவை. அவற்றுக்கு இன்றைய காலக்கட்ட உரையை எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in