Published : 30 Jun 2018 09:56 AM
Last Updated : 30 Jun 2018 09:56 AM

நாள் முழுவதும் வாசிக்கிறேன்!- வீ.ந.சோமசுந்தரம்

தி

ருச்சியில் எந்தக் குழு நடத்தும் இலக்கியக் கூட்டத்திலும் வீ.ந.சோமசுந்தரத்துக்கு ஒரு நாற்காலி உண்டு. அவருடைய அபாரமான வாசிப்பும், தன்னுடைய கருத்துகளுக்கு அப்பாற்பட்டு பொதுக் காரியங்களில் எல்லோருடனும் இணைந்து நிற்கும் பண்பும் முக்கியமான காரணம். நல்ல வாசகர் என்பதோடு, தொடர்ந்து எழுதிவரும் கட்டுரையாளரும்கூட வீ.ந.சோமசுந்தரம். 15 ஆண்டுகளுக்கும் மேல் நடத்திவரும் ‘இப்படிக்கு’ சிற்றிதழ் இவருடைய கட்டுரையை மட்டுமே தாங்கி வரக்கூடியது என்ற சிறப்பைக் கொண்டது. இவருடைய முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று ‘இலக்கியச் சுற்றம்’ அமைப்பு.

“1977-ல் திருச்சி வந்தேன். அப்போ இலக்கிய அமைப்பு எதுவும் கிடையாது. இலக்கிய வட்டம்னு ஒண்ணு இருந்தது. ஆனா சரியா செயல்படலை. ஓய்வுபெற்ற பின்னாடி நாலு இலக்கிய அமைப்புகளை ஆரம்பிச்சேன். முதல் ஞாயிற்றுக்கிழமை ‘தமிழர் அறிவியக்கப் பேரவை’, 2-வது ஞாயிற்றுக்கிழமை ‘தமிழ் கலை இலக்கியப் பேரவை’, அடுத்த வாரம் ‘பாவாணர் தமிழ் இயக்கம்’, நாலாவது வாரம் ‘இலக்கியச் சுற்றம்’. இப்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு அமைப்பு மூலமா இலக்கிய நிகழ்ச்சி நடத்திட்டு இருந்தேன்.

இதுல ‘இலக்கியச் சுற்றம்’ சிறப்பா செயல்பட்டுச்சு. ஒரு நூல், ஒரு நூலாசிரியர், அந்த நூல் பத்திப் பேச ஒருத்தர். இப்படி 85 கூட்டம் நடத்தி யிருக்கோம். ஒவ்வொரு கூட்டத்துலயும் குறைஞ்சது 100 பேர் கூடுவோம். நான் ஒருங்கிணைப்பாளர். தலைவர் அப்படின்னுலாம் யாரும் கிடையாது.

‘இந்து ஆங்கிலம்’ இந்தக் கூட்டம் பத்தி அப்போ நிறைய எழுதினாங்க. தினமும் 5 தினசரிகள் வாசிக்குறேன். இது தவிர, வாரப் பத்திரிகைகளும் வாசிக்குறது உண்டு. ‘இந்து தமிழ்’ நடுப்பக்கக் கட்டுரைகளும், இலக்கியப் பகுதியும் சிறப்பா வந்துட்டு இருக்குது. செய்தித்தாள்ல இலக்கியம் படிக்குறது பெரிய விஷயம். பிரமிள் பேரெல்லாம் சிறுபத்திரிகை தாண்டி வராது. எவ்ளோ பெரிய மாற்றம் செஞ்சிருக்கீங்க. நடுப்பக்கக் கட்டுரைகளும் சார்பு இல்லாம தெளிவான பார்வையோட வருது. நல்ல மொழி, வார்த்தைகள் உபயோகிக்குறதுல கவனமா இருக்குறது, முக்கியமா பிழைகள் இல்லாம வருது.

ஓய்வு பெற்றதுக்கு அப்புறமா வாசிக்குறது மட்டும்தான் ஒரே வேலை. இரவுல தொலைக்காட்சி விவாதம் பாக்குறது உண்டு. அது தவிர மத்த நேரம் முழுக்கவும் வாசிப்புதான். நடுப்பக்கத்ததான் முதல்ல வாசிக்கிறேன். யார்கிட்டயும் வெட்டிப்பேச்சு பேசுறது இல்ல. அதுக்கு வாசிப்பு மட்டும்தான் ஒரே காரணம். இப்போ, மெக்ஸிக அதிபரா இருந்த விசெண்டே ஃபாக்ஸ் எழுதின ‘ரெவெல்யூஷன் ஆஃப் ஹோப்’ புத்தகம் வாசிச்சிட்டு இருக்குறேன்.”

- த.ராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x