

சிறுவர்களுக்கான திருக்குறள் 100
தொகுப்பு: கோ.கிருஷ்ணகுமார்
யமுனா பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.20
தொடர்புக்கு: 94873 85050
திருக்குறளில் சிறார்களுக்கு ஒழுக்கத்தையும் பண்பையும் போதிக்கும் வகையில் உள்ள குறள்களைத் தேர்ந்தெடுத்து இந்த நூலில் தொகுத்துள்ளார் நூலாசிரியர்.
மதுரை நாயக்கர்கள்
பொன்னுசுவாமி சுந்தர்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.260
தொடர்புக்கு: 99404 46650
மதுரையை ஆண்ட நாயக்கர்கள் குறித்து விரிவாகப் பேசுகிறது இந்த நூல். திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள், சொக்கநாதர், ராணி மீனாட்சி வரை அவர்கள் காலப் பங்களிப்புகளை இந்த நூல் பேசுகிறது.
கலியன் மதவு
ஜூனியர் தேஜ்
புஸ்தகா டிஜிட்டல் மீடியா
விலை: ரூ.620
தொடர்புக்கு: 74185 55884
கலியன் என்கிற ஒரு எளிய மனிதரை நாயகனாக்கிக் கொண்டு சொல்லப்பட்ட கதை இது. சமூகப் பிரச்சினைகள், பழக்கவழக்கங்கள் போன்ற பல அம்சங்களையும் சேர்த்து இதை ஒரு சமூக நாவலாக எழுதியிருக்கிறார் ஜூனியர் தேஜ்.
கனவுகள் மின்னும் தேசம்
பத்மா அர்விந்த்
ஹெர் ஸ்டோரிஸ்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 96003 98660
அமெரிக்கா பற்றிய உண்மையான சித்திரத்தை இந்த நூல் அளிக்க முயல்கிறது. அமெரிக்க வாசியான நூலாசிரியர் தன் சொந்த அனுபவத்தின் விளைச்சலாக இந்த நூலை எழுதியுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் துளிப்பாக் (ஐக்கூ) கட்டுரைகள்
தொகுப்பு: புதுவை யுகபாரதி
சாகித்திய அகாடமி
விலை: ரூ.250
தொடர்புக்கு: 044 24311741
ஜப்பானியக் கவிதை வடிவமான ஐக்கூ குறித்து பாரதியார், பாரதிதாசன், ஈரோடு தமிழன்பன், அப்துல் ரகுமான், மு.முருகேஷ் உள்ளிட்ட கவிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.