நூல் வரிசை: முதுமை ஒரு வரம்

நூல் வரிசை: முதுமை ஒரு வரம்
Updated on
2 min read

முதுமை ஒரு வரம்
என்.பத்ரி
முக்கடல் வெளியீடு
விலை: ரூ.250
தொடர்புக்கு: 94443 65642

முதியோர் நலன் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உணர்வுபூர்வமாக, அதே சமயம் சுவாரசியமான நடையில் நூலாசிரியர் பேசியிருக்கிறார்.

கட்டுமானப் பொறியியலைத் தெரிந்துகொள்வோம் தெளிவாகப் புரிந்துகொள்வோம்
அ.வீரப்பன்
அ.வீரப்பன், நண்பர்கள் குழுமம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 72000 79289

கட்டுமானத் துறையின் நுட்பங்களை எடுத்துரைக்கும் நூல் இது. நவீன அறிவியலை அழகிய தமிழில் நூலாசிரியர் இதில் விவரித்துள்ளார்.

மதுவிலக்கின் மாண்பு
கே.ஆர்.கல்யாணராமன்
அல்லயன்ஸ் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 92892 81314

மதுவிலக்கு பற்றிய விவாதங்கள் நடக்கும் இந்தக் காலத்தில், அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. வள்ளுவர், காந்தி, ராஜாஜி உள்ளிட்ட ஆளுமைகள் மதுவிலக்கு பற்றி கூறிய கருத்துகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

நத்தையின் பயணம்
க.அம்சப்ரியா
வெற்றிமொழி வெளியீட்டகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 97151 68794

சிங்கத்தின் கல்யாணத்துக்குச் செல்லும் நத்தையின் பயணம் பற்றிய முதல் கதை, கற்பனையும் எளிமையும் கூடியது. இம்மாதிரியான சிறார் கதைகளின் தொகுப்பு இது.

வஞ்சிக்கப்படும் பொதுக் கல்வி
சு.உமா மகேஸ்வரி
சுவடு பதிப்பகம்
விலை: ரூ.170
தொடர்புக்கு: 95510 65500

கல்வி குறித்த பல்வேறு விவாதங்களைக் கிளப்பும் கட்டுரைகளின் தொகுப்பு இது. நமது கல்விச் சூழல் பற்றிய பார்வையை இந்தக் கட்டுரைகள் வழி அறிந்துகொள்ள முடிகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in