

உன்னதம் ஆரத்தழுவும் நேரம்
யதிராஜ ஜீவா
மெய் நிழல் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 90928 58529
நவீன கவிதைக்கு விநோதமும் மறைபொருளும் அவசியம் என்பதற்கான உதாரணங்களாக இந்தக் கவிதைகள் உள்ளன. வரிகள் ஒவ்வொன்றும் காட்சி வடிவங்களாக உள்ளன.
தமிழ் வாசிப்பு முறைகளும் அடிப்படை இலக்கணமும்
மு.கலைவேந்தன்
தமிழ் ஐயா வெளியீட்டகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 94867 42503
தமிழ் மொழியை அறிந்துகொள்வதற்கான அடிப்படை இலக்கணம் இந்த நூலில் எளிமையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
கங்கா தேவியின் மதுரா விஜயம்
எஸ்.கிருஷ்ணன்
சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 81480 66645
விஜயநகரப் பேரரசு இளவரசரான குமார கம்பணன் மதுரை நோக்கி முன்னேறித் தமிழகத்தை மீட்ட கதையை அவரது மனைவி கங்கா தேவி எழுதியுள்ளார். அதன் எளிய தமிழ் வடிவம் இந்நூல்.
ஒரு பட்டதாரி கணக்காளரின் வாழ்க்கைப் பயணம்
வே.அசோக் பாண்டியன்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 98409 52919
தந்தை மறைவு, கல்லூரி மாணவ அனுபவம் எனத் தனி அனுபவத்தையும் தொழிற்சங்கப் போராட்டம், வணிகவியல் பாடத்திட்டம் எனப் பொது அனுபவத்தையும் இந்த நூல் பேசுகிறது.
வள்ளி புராணம் நாட்டுப்புற வழக்காறுகள்
சு.சண்முகசுந்தரம்
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.550
தொடர்புக்கு: 98404 80232
தமிழ் மரபில் வள்ளிக்குத் தனி இடம் உண்டு. அதற்குச் சான்றான நாட்டார் இலக்கியங்களை இந்த நூல் ஆய்வுசெய்துள்ளது.
திண்ணை |மா.இராசேந்திரன் நூல் வெளியீடு: எழுத்தாளரும் பேராசிரியருமான மா.இராசேந்திரனின் சிறுகதைத் தொகுப்பு ‘காலப் பிசாசுகள்’ நூல் இன்று (21.09.24) மாலை 5.30 மணி அளவில் சென்னை மயிலாப்பூர் சிஐடி நகர் கவிக்கோ மன்றத்தில் வெளியிடப்படவுள்ளது. நீதிபதி சந்துரு, திரைப்பட இயக்குநர் நலன் குமாரசாமி, எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், அகரமுதல்வன், மீனா கந்தசாமி, பத்திரிகையாளர் கார்த்திகேயன், பதிப்பாளர் கவிதா சொக்கலிங்கம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.