

‘கேள்வி கேட்கும் குழந்தையே, அறிவின் விதையை விதைக்கும் விவசாயி’ என்று சொல்வது உண்டு. உலகின் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்றாகவும் கடினமானதாகவும் இருப்பது ‘கேள்வி’ கேட்பதுதான்! ‘ஏன், எதற்கு, எப்படி’ என்று கேள்விகளாலேயே உலகம் உருவாகியிருக்கிறது.
குழந்தையாக இருக்கும்போது கேள்விகள் உதித்துக்கொண்டே இருக்கின்றன. வளர வளர கேள்விகள் கேட்பது குறையும். அதற்குக் காரணம், ‘பெரியவர்களும் ஆசிரியர்களும்தான் கேள்விகள் கேட்பார்கள்; பதில் சொல்வது குழந்தைகள், மாணவர்களின் பொறுப்பு’ என்கிற எழுதப்படாத விதி இங்கே இருப்பதுதான்.
அதனால், கேள்வி கேட்க நினைக்கும் மாணவர்களின் இயல்பான ஆர்வம் தொலைந்துவிடுகிறது. உங்கள் கைகளில் தவழும் ‘டிங்குவிடம் கேளுங்கள்’ இரண்டாம் பாகம், வெறும் புத்தகம் அல்ல. இது ஓர் அறிவியல் களஞ்சியம். இந்து தமிழ் திசை ‘மாயா பஜார்’ இணைப்பிதழில் ‘டிங்குவிடம் கேளுங்கள்’ பகுதியில் கேட்கப்பட்ட முக்கியக் கேள்விகளின் தொகுப்பு இது.
டிங்குவிடம் கேளுங்கள்
(பாகம் - 2)
எஸ்.சுஜாதா
விலை: ரூ.130
கண்டுபிடிப்புகளின் கதை: ஏன், எதற்கு, எப்படி என்பது போன்ற கேள்விகளுடன் காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற மனிதர்களின் ஆர்வம்தான் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகை செய்திருக்கிறது. இயற்கையாக உருவான நெருப்பைக் கண்டு முதலில் பயந்த மனிதன், பிறகு அந்த நெருப்பை எப்படிக் கட்டுப்படுத்துவது, எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்பது பற்றி அறிந்துகொண்டபோது, பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தான். பின்னர் சக்கரம் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது.
அது மனிதனை இன்னும் வேகமாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. இப்படிப் பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் கண்டுபிடித்த ஏராளமான விஷயங்களால்தான் இன்று அறிவியலில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறோம். நம் வாழ்க்கைத்தரமும் மேம்பட்டிருக்கிறது.
ஆனால், இன்னும் மனிதனால் கண்டுபிடிக்க முடியாமல், மனிதனால் அறிந்துகொள்ள முடியாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. தன்னுடைய அறிவாலும் அறிவியல் தொழில்நுட்பத்தாலும் அறியாதவற்றையும் அறிந்துகொள்வதற்குத் தொடர்ந்து முயன்றது மனித இனம். அப்படியான கண்டுபிடிப்புகளை எளிய மொழியில் ‘இந்து தமிழ் திசை’ ‘மாயா பஜார்’ இணைப்பிதழில் த.வி.வெங்கடேஸ்வரன் தொடர் கட்டுரைகளாக எழுதிவந்தார். அதன் தொகுப்பு நூல் இது.
புதிய கண்டுபிடிப்புகள்
த.வி. வெங்கடேஸ்வரன்
விலை: ரூ.140
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 74013 29402