Published : 16 Jun 2018 09:51 am

Updated : 16 Jun 2018 10:23 am

 

Published : 16 Jun 2018 09:51 AM
Last Updated : 16 Jun 2018 10:23 AM

தனித்தமிழ் இயக்கங்களின் உள்வரலாறு

 

ஞா


னாலயா கிருஷ்ணமூர்த்திக்கு இலக்கியவாதிகள் எழுதிய கடிதங்களை ‘தேடலில் தெளியும் திசைகள்’ என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்ட வைகறைவாணன், தொடர்ந்து பேராசிரியர் இரா.இளவரசு தனது மனைவிக் கும் நண்பர்களுக்கும் எழுதிய 191 கடிதங்களையும் அவருக்கு வந்த 125 கடிதங்களையும் தொகுத்து ‘இங்கிவனை யாம் பெறவே!’ என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். 1958 தொடங்கி 94 வரையில் எழுதப்பட்ட இக்கடிதங்கள், நட்புறவின் ஆழத் தைச் சொல்லும் இலக்கியங்கள் என்பதோடு, தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடையே நடந்துவந்த கருத்துப் பரிமாற்றங்களின் ஆவணமாகவும் விளங்குகின்றன. தமிழ்க்குடிமகன், தங்கப்பா, இளவரசு ஆகியோரைப் பெருஞ்சித்திரனார் ஆட்கொண்ட தும் பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணித்ததும் குறிப்பிடத்தக்க வரலாற்றுப் பதிவு. தனித்தமிழில் எழுதப்பட்டுள்ள இக்கடிதங்கள், செய்யுள் மொழிநடைக்கு நெருக்கமாக இருப்பதோடு சமயங்களில் செய்யுள்களாகவும் மாறிவிடுகின்றன. நெடுஞ்செழியனின் ‘மன்றம்’ இதழுக்கு இளைஞர்களிடமிருந்த செல்வாக்கு, அப்போது நிலவிய அரசியல் சூழல், தனித்தமிழ் இயக்கத்துக்கும் திராவிட இயக்கத்துக்குமான உறவும் பிணக்குகளும் என்று இக்கடிதங்கள் தெரிவிக்கும் செய்திகள் ஏராளம். தமிழ் இயக்கங்களின் உள் வரலாறு பற்றிய சித்திரத்தை இத்தொகுப்பிலிருந்து பெற முடியும் என்று பழ.அதியமான் எழுதியிருக்கும் முன்னுரைக் குறிப்பு மிக பொருத்தமானது.

- புவி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

book-review

விநோத நூலகம்

இலக்கியம்

More From this Author

x