அரிய தமிழ் நூல்களுக்கு...

அரிய தமிழ் நூல்களுக்கு...
Updated on
1 min read

அரிதான பல புத்தகங்களைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது. சென்னைப் புத்தகக் காட்சியில் பழமையின் வாசம் வீசும் அரங்குகளில் இந்த அரங்கும் ஒன்று (அரங்கு எண்: 92).

மொத்தம் 500 தலைப்புகள். ‘சோழர் செப்பேடுகள்’, ‘சட்டத் தமிழ் அகராதி’, ‘செம்மொழித்தமிழ்’ ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய நூல்கள். பெரியசாமித் தூரன் மரபைத் தொடர்ந்து ‘அறிவியல் கலைக்களஞ்சியம்’ 19 தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதேபோன்ற இன்னொரு நூல்தான் ‘வாழ்வியல் களஞ்சியம்’ (15 தொகுதிகள்). எட்கர் தர்ஸ்டசன் என்ற ஆங்கிலேயர், தென்னிந்திய சாதி முறைகளைப் பற்றி ஆய்வுசெய்து வெளியிட்ட ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ புத்தகமும் முக்கியமானது. அரிதான புத்தகங்களின் நேசர்களுக்கு ஒரு நற்செய்தி, ‘செம்மொழித்தமிழ்’ புத்தகம் தவிர மற்ற புத்தகங்களுக்கு இந்த அரங்கில் 25% தள்ளுபடி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in