நூல் வரிசை | கம்பரும் வால்மீகியும்
கம்பரும் வால்மீகியும்
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.275
தொடர்புக்கு: 044 24896979
வால்மீகி ராமாயணத்தின் மொழிபெயர்ப்பு நூல் எனக் கம்பராமாயணத்தைச் சுருக்கிவிட முடியாது. வால்மீகியின் ராமருக்கும் கம்பரின் ராமருக்கும் வித்தியாசங்கள் உண்டு. இதுபோன்ற அம்சங்களை இந்நூலில் நாமக்கல் கவிஞர் விரிவாக அலசியிருக்கிறார்.
தென்னிந்தியப் பறையர்கள் திராவிடர்களா?
இராபர்ட் கால்டுவெல் (ஆசிரியர்: த.லெட்சுமி)
பரிவாதினி பதிப்பகம்
விலை: ரூ.60
தொடர்புக்கு: 90925 59307
ஆதி காலத்தில் தென்னிந்தியாவில் சாதிகளின் நிலை, பிறகு அது வறியவர்-வலியவர் என மாறியது என சாதி தோன்றிய சூழல் குறித்துப் பல்வேறு விஷயங்களை கால்டுவெல்லின் கட்டுரை வழி புரிந்துகொள்ள முடிகிறது.
சாப்ஜி கதைகள்
சாப்ஜி கமால் காதர்ஷா
விளிம்பு பதிப்பகம்
விலை: ரூ.220
தொடர்புக்கு: 94889 07282
பழைய நினைவுகளைத் தூண்டும் விதமாகச் சில கதைகள் உள்ளன. மனித உணர்ச்சியே இந்தக் கதைகளின் மையமாக உள்ளது. அது வாசிப்பவரைக் கவரும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள்
அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி
சூரியன் பதிப்பகம்
விலை: ரூ.650
தொடர்புக்கு: 94437 22618
வேலூர் வி.எம்.உபயதுல்லா, கம்பம் பீர்முகமது பாவலர் போன்ற கேள்விப்படாத பலரையும் இந்த நூல் கவனத்துடன் அறிமுகப்படுத்துகிறது. இஸ்லாமியக் கவிஞர்கள் பற்றித் தனிக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.
உ.வே.சா. நூல்களில் சொல்லும் சுவையும்
ஆறு.அழகப்பன்
முல்லை பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 98403 58301
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேசிய உரைகளின் தொகுப்பு இது. உ.வே.சாமிநாதர் பதிப்பித்த இலக்கியம், வாழ்க்கை வரலாறு, உரைநடை ஆகியவற்றின் சிறப்புகளை நூலாசிரியர் சுவைபடப் பேசியிருக்கிறார்.
