

கலைஞர் 100 கவிதைகள் 100
தொகுப்பு: வைரமுத்து
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 87545 07070
பாரதிதாசன் தொடங்கி இன்றைய கவிஞர் அம்பிகா குமரன் வரை கவிஞர்கள் நூறு பேர் மு.கருணாநிதி குறித்து எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது.
பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம்
ம.லெனின்
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.266
தொடர்புக்கு: 72000 50073
நேரம்தான் நம் கையில் இருக்கும் பெருஞ்செல்வம். அதை முறைப்படி எப்படிச் செலவழிப்பது என்பது குறித்து இந்த நூல் தெளிவாக விளக்குகிறது.
சிரித்து மகிழ்ந்திட பரமார்த்த குரு கதைகள்
பி.எஸ்.ஆச்சார்யா
நர்மதா பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 98402 26661
வீரமாமுனிவரால் எழுதப்பட்ட பரமார்த்த குரு கதைகள் தமிழில் முன்னோடிக் கதை வடிவம். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கதைகளின் தொகுப்பு இது.
மீண்டும் மீண்டும் வசந்தம்
சிவப்ரியா
கலைஞன் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 044 2834 0488
மூன்று தலைமுறைக்கு முன் பிரிட்டிஷாரால் தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஒரு குடும்பத்தின் கதையை இந்த நாவல் சொல்கிறது.
கொன்றைவேந்தன் மீள் வாசிப்பு புத்தநெறி பொருளாதாரம்
மா.அமரேசன்
அறம் பதிப்பகம்
விலை: ரூ.170
தொடர்புக்கு: 91507 24997
வாழ்க்கைக்கான பல போதனைகளை புத்தர் வழங்கியுள்ளார். அவர் கூறிய பொருளாதாரம் தொடர்பான அறிவுரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.