

என் வாழ்க்கைப் பயணம்
சே.குமரப்பன்
மல்லிகை பதிப்பகம்
விலை: ரூ.400
தொடர்புக்கு: 94434 42361
செட்டிநாட்டுப் பகுதியில் தான் பிறந்து வளர்ந்த கதையைச் சொல்கிறார் நூலாசிரியர். செல்வச் செழிப்பிலும் வறுமையிலும் கழித்த இவரது அனுபவம் ஒரு படிப்பினை.
பேராசிரியரின் தொல்காப்பிய உரை
ஓர் ஆய்வு
மா.நன்னன்
ஏகம் பதிப்பகம்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 94449 09194
தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்துக்குப் பலரும் உரை எழுதியுள்ளனர். 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பேராசிரியர் என்கிற விளிப்பெயர் கொண்ட அறிஞர் எழுதிய உரை குறித்து நன்னன் இதில் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
திறந்தால் எல்லாம் இருக்கும் டிரங்க் பெட்டி
வலம்புரி லேனா
எழில் மீனா பதிப்பகம்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 98941 38439
சுவாரசியமான பத்திகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது இந்நூல். சிற்றிதழ், இலக்கியம், கவிதை, கரோனா எனப் பல வண்ணங்களிலான பத்திகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
திண்ணை | ஆரணி புத்தகத் திருவிழா: ஆரணி புத்தகத் திருவிழா, நேற்று தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. ஆரணி, கொசப்பாளையத்திலுள்ள பாஞ்சாலி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் இந்தப் புத்தகக் காட்சியில் எழுத்தாளர்கள் அழகியபெரியவன், ஜி.குப்புசாமி, கவிப்பித்தன், மருதன், கே.வி.ஷைலஜா உள்ளிட்ட பலர் உரையாற்றவுள்ளனர்.
இந்தப் புத்தகக் காட்சியை அறம் செய்வோம் அமைப்பும் ழ புத்தகக் குழுவும் இணைந்து ஒருங்கிணைக்கிறது. இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்கள் இந்தப் புத்தகக் காட்சியில் கிடைக்கும்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஒருங்கிணைக்கும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா மா.மன்னர் கல்லூரியில் ஆகஸ்ட் 5 வரை நடைபெறவுள்ளது. இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை பதிப்பகமும் (ஸ்டால் எண்: 82) கலந்துகொண்டுள்ளது.