நூல் வரிசை: இன்றைய ஆசியா

நூல் வரிசை: இன்றைய ஆசியா
Updated on
2 min read

இன்றைய ஆசியா
அ.பிச்சை
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 90803 30200

1900 இல் தொடங்கி 2020 வரையிலான ஆசியக் கண்டத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர். கலை, பண்பாடு, அரசியல் எனப் பல துறைகளின் நிகழ்வுகள் கவனத்துடன் தொகுக்கப்பட்டுள்ளன.

விடிலிக்காடு
காமராசு செல்வன்
பொன்சொர்ணா பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 94428 34236

விடிலி என்பது பனை ஓலைக் குடில் எனப் பொருள்படும். இந்த விடிலியில் பதநீரைக் காய்ச்சிக் கருப்பட்டி ஆக்குவார்கள். இந்தக் கதையிலும் ஆசிரியர் பனை சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையையும் இறுகக் கட்டியிருக்கிறார்.

இந்தியாவில் முஸ்லீம்கள்
வீ.பழனி
அ ஆ இ பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9443391196

இந்தக் கட்டுரைத் தொகுப்பு விடுதலைப் போராட்டத்தில் பங்கு, பிரிவினை, காந்தியும் முஸ்லீம்களும் என்கிற பல தலைப்புகளில் ஒரு வரலாற்று ஆய்வாக விரிகிறது.

நதிக்கரைக் குறிப்புகள்
இரா.அறிவுச்செல்வன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 87780 73949

இயல்பான கதைகள் கொண்ட தொகுப்பு இது. எளிய மனிதர்கள் கதைமாந்தர்களாக வருகிறார்கள். நடப்புக் காலகட்டத்தின் பலியாடுகளாக அவர்கள் இருப்பதையும் கதைகள் சித்திரிக்கின்றன.

வலி
அரிமதி இளம்பரிதி
பிரியா நிலையம்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 94444 62284

அரசு அமைப்புகளின் பிரச்சினைகளை, தொழிலாளர்களின் வறுமையை இந்தக் கவிதைகள் வழி கவிஞர் பதிவுசெய்திருக்கிறார். எளிமையான மொழியில் கோஷக் குரலாகக் கவிதைகள் வெளிப்பட்டுள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in