

தமிழவன் நாவல்களும் ‘தான்’ குறியிடுதலும்
மேலும் சிவசு
மேலும் வெளியீட்டகம்
விலை: ரூ.80
தொடர்புக்கு: 94437 17804
எழுத்தாளரும் பேராசிரியருமான தமிழவன் நாவல்களைப் பற்றிய நூல் இது. அவரது பிரபலமான ‘ஜி.கே. எழுதிய மர்ம நாவல்’, ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ ஆகிய நாவல்களைப் பற்றிய பார்வை கவனம்கொள்ள வைக்கிறது.
என்றாலும் நான் எழுகிறேன்
மாயா ஆஞ்சலு (தமிழில் ஆர்.சிவகுமார்)
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.125
தொடர்புக்கு: 04652 278525
அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர் மாயா ஆஞ்சலு. ‘துயரத்தில் வேர்கொண்ட கடந்த காலத்திலிருந்து/நான் மீண்டெழுகிறேன்’ என்கிற கவிதை வரியை இந்தக் கவிதைத் தொகுப்புக்கான ஒரு பதமாக முன்வைக்கலாம்.
மணிப்பூர் கலவரமும் பின்னணியும்
விதூஷ்
சுவாசம் வெளியீடு
விலை: ரூ.170
தொடர்புக்கு: 81480 66645
மணிப்பூர் பிரச்சினை இப்போது அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. இந்தப் பின்னணியில் இந்தப் பிரச்சினையை அதன் வரலாற்றுடன் முழுமையாக அலசுகிறது இந்நூல்.
கதவோரம்
தி.துரைசாமி
வாகைப் பதிப்பகம்
விலை: ரூ.75
தொடர்புக்கு: 9842241438
நாட்டார் பாடல்களைப் போல் புழங்கு சொற்களை வைத்து எழுதப்பட்ட காதல் கவிதைகள். துதிப் பாடல்கள் வடிவமைப்பில் வெளிப்பட்டுள்ளன கவிதைகள்.
மாணவர்க்கு நல்வழி
அரங்கன்.மணிமாறன்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 99430 67963
மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள், இருக்கக் கூடாத பழக்கங்கள் எனப் பலவற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது.