

கோவை: எழுத்தாளர் மமதி சாரி எழுதிய ‘குட்டிகள் குறள்’ நூலின் 2-ம் பாகம் வெளியீடு கோவையில் நேற்று நடைபெற்றது. குழந்தைகளைக் கவரும் வகையில், அனிமேஷன் படம்போல ‘குட்டிகள் குறள் பாகம்-2’ என்ற நூலை பிரபல தொகுப்பாளரும், எழுத்தாளருமான மமதி சாரி எழுதியுள்ளார்.
இந்நூலை `இந்து தமிழ் திசை' பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூல் வெளியீட்டு விழா, கோவை ராம் நகரில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் நேற்று நடைபெற்றது.
‘குட்டிகள் குறள்’ நூலின் 2-ம் பாகத்தை எழுத்தாளர் மமதிசாரி, `இந்து தமிழ் திசை' கோவைபதிப்பு செய்தி ஆசிரியர் என்.பிரபாகரன் ஆகியோர் வெளியிட, ராம்நகர் சபர்பன் சொசைட்டி துணைத் தலைவர் ரமணி சங்கர்,கலாச்சாரப் பிரிவு தலைமை நிர்வாகி கல்யாணி சங்கர், `ரோட்டரி கோயம்புத்தூர் சென்டர்' முன்னாள் தலைவர் சூரியநாராயணன், சபர்பன் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியை சித்ரா, சபர்பன்மெட்ரிக். பள்ளி முதல்வர் சித்ராஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில், மாணவ, மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புத்தகம் எங்கு கிடைக்கும்? 'குட்டிகள் குறள்' 2-ம் பாகம் நூல் 143 பக்கங்களைக் கொண்டது. இதில், அரண், விருந்தோம்பல், பொருள் செயல்வகை, கடவுள்வாழ்த்து ஆகிய அதிகாரங்களில் இடம்பெற்றுள்ள குறள்கள், கதை வடிவில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதைக்கும் உணர்வுப்பூர்வமான ஓவியங்களை நூல் ஆசிரியரே வரைந்திருப்பது சிறப்பு.
நூலின் விலை ரூ.150. இதை store.hindutamil.in/publications என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவுசெய்து வாங்கலாம். அஞ்சல் மற்றும் கூரியர் மூலம் பெற 'KSL MEDIA LIMITED' என்ற பெயரில் டிடி அல்லது மணியார்டர் அல்லது காசோலையை ‘இந்து தமிழ் திசை, 124, வாலாஜா சாலை,சென்னை 600 002’ என்ற முகவரிக்குஅனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 7401296562, 7401329402ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.