நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
2 min read

திருவிளையாடல் புராணம்
எஸ்.எஸ்.மாத்ருபூதேஸ்வரன்
நர்மதா பதிப்பகம்
விலை: ரூ.260
தொடர்புக்கு: 98402 26661

சிவபெருமானின் திருவிளையாடல்களைச் சொல்லும் இந்த நூலை இயற்றியது பரஞ்சோதி முனிவர். அதை எளிமையான வடிவில் நூலாசிரியர் தந்துள்ளார்.

சாதனை படைக்கும் சாந்தனும் சுவாவும்
சூ.குழந்தைசாமி
காந்தி அமைதி நிறுவனம்
விலை: ரூ.460
தொடர்புக்கு: kulandhaisamy.gpf@gmail.com

மகாத்மா காந்தியின் கருத்துகளை வலியுறுத்தும் வகையிலான கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. சிறார்களுக்குப் பாடமாகும் கதைகள் இவை.

நத்தையின் பயணம்
சிறார் இலக்கிய நூல்
க.அம்சப்ரியா
வெற்றிமொழி வெளியீட்டகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 97151 68794

சிறார்களுக்கான 7 குறுங்கதைகள் கொண்ட படங்களுடன் கூடிய தொகுப்பு இது. சிறார்களின் உலகத்தை இந்தக் கதைகள் சித்திரிக்கின்றன.

நவம்பர் 1
பைங்குளம் இரா.சிகாமணி
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 98404 80232

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த குமரி மாவட்டப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைந்த வரலாற்றைப் பேசும் கதை. அந்தப் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆற்றல்மிகு மூளை
ப.பாலசுப்பிரமணியன்
அழகு பதிப்பகம்
விலை: ரூ.165
தொடர்புக்கு: 94441 91256

மூளையை அதன் அறிவியல் சார்ந்து தீர்க்கமாக விவரிக்கிறது இந்நூல். இன்னொரு பக்கம், மூளை என்பதை மனது சார்ந்து அகவயமாகவும் இந்த நூல் சொல்லியிருக்கிறது.

மதுவிலக்கின் மாண்பு
கே.ஆர்.கல்யாணராமன்
அல்லயன்ஸ் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 928928 1314

மதுவிலக்கு பற்றிய வரலாற்றைப் பகிரும் நூல். இதன் வழி சுதந்திரக் காலக்கட்ட வரலாறும் விரிவுகொள்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் படிக்க வேண்டிய நூல்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in