நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
2 min read

அம்மா முதல் அயலான் வரை
யுவா
சுட்டி மீடியா
விலை: ரூ.444

தொடர்புக்கு: 96003 98660

வாழ்க்கையைப் பற்றிய நல்லெண்ணத்தை அளிக்கும் கதைகள். குழந்தைகளும் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிய மொழியில் இந்தக் கதைகள் எழுதப்பட்டுள்ளன.

உப்பு ரொட்டி
பொன்.பிரபாகரன்
தட்டான் பதிப்பகம்
விலை: ரூ.125
தொடர்புக்கு:73393 48514

இலங்கையைச் சேர்ந்த கவிஞரின் தொகுப்பு இது. ஓசை நயம் மிக்க கவிதைகள் இவை. இலங்கையின் அரசியல் சூழலையும் எதிர்காலத்தைப் பற்றியும் இந்தக் கவிதைகள் பேசுகின்றன.

ஒரு குட்டி ஆந்தைமுதலிய கதைகள்
ராணி திலக்
பாலி வெளியீடு
தொடர்புக்கு: paalipublication@gmail.com

கவிஞர் ராணி திலக்கின் குறுங்கதை இவை எனச் சொல்லலாம். ஆனால், இவற்றைக் கவிதைகள் எனச் சொல்வதே பொருத்தமானதாக இருக்கும்

அறிவியல்பூர்வமான இந்து சமயம்
என்.பி.ஏ.ரவி
மலாயாப் பல்கலைக்கழகம், மலேசியா
விலை: ரூ.465
தொடர்புக்கு: 99447 74835

இந்து சமயக் கருத்துகளையும் தொன்மங்களையும் அறிவியலுடன் இணைத்து ஆராய்கிறது இந்த நூல். அதனுடனான தொடர்புகளையும் விளக்குகிறது இந்த நூல்.

திருக்குறள் தமிழார்வலர் உரை
சிலம்பூர்க் கிழவன்
தமிழ்ச்செல்வி பதிப்பகம்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 94876 21180

தமிழில் அதிகம் உரை எழுதப்பட்ட நூல்களில் ஒன்று திருக்குறள். நவீன காலப் புரிதல்களுடன் எழுதப்பட்ட மற்றுமோர் உரை நூல் என இதைச் சொல்லலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in