

தமிழ்ப் பதிப்புகளில் செவ்வியல் தமிழ் - ஒரு மதிப்பீடு
ஆ.மணி
தமிழன்னை ஆய்வகம்
விலை: ரூ.170
தொடர்புக்கு: 94439 27141
தமிழ்ப் பதிப்புகளில் தொல்காப்பியம் போன்ற செவ்வியல் தமிழ் நூல்கள் பதிப்பிக்கப்பட்டது குறித்த தன் கருத்துகளை நூலாசிரியர் இந்நூலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
நானும் டி.எஸ்.எலியட்தான்
தபசி
வேரல் புக்ஸ்
விலை: ரூ.380
தொடர்புக்கு: 95787 64322
கவிஞர் தபசியின் 286 கவிதைகளின் தொகுப்பு இது. மாறிவிட்ட தலைமுறை, சமூகம், பண்பாடு குறித்துக் கவலைக்குப் பதிலாக, அதைக் கிண்டல் செய்யும் கவிதைகள் இவை.
பட்டினத்தார் அடிச்சுவடுகள்
சி.எஸ்.முருகேசன்
சங்கர் பதிப்பகம்
விலை: ரூ.175
தொடர்புக்கு: 044-2650 2086
பட்டினத்தார் யார் என்கிற கேள்வியில் தொடங்கி, அவரைப் பற்றி முழுமையாகப் பேசுகிறது இந்த நூல். வாழ்க்கை குறித்த பட்டினத்தாரின் கேள்விகள், தத்துவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் சாதிகள்
ப.செ.ராஜ்
அறம் பதிப்பகம்
விலை: ரூ.440
தொடர்புக்கு: 91507 24997
சாதியை ஒழிக்கும் நோக்கில் அதன் பாகுபாடுகளை இந்த நூலின் கட்டுரைகள் பேசுகின்றன. ஆளுமைகள் பலரும் இந்தக் கருப்பொருளில் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
தமிழ் விளக்கங்களுடன் ஸ்போக்கன் இங்கிலீஷ் பிராக்டிஸ் புக்
எம்.எஸ்.மேனன், கே.கிருஷ்ணகுமார்
யமுனா பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.220
தொடர்புக்கு: 04632 293146
ஆங்கிலத்தில் உரையாடுவதில் உள்ள தயக்கங்களைக் களையும் நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாடல் தரப்பட்டுள்ளதால் வாசகர்கள் தெளிவு பெற முடியும்.
மகத்தான விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன்
ஜெ.ஜெயராணி
சென்னை பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.140
தொடர்புக்கு: 9884041948
மின்சாதனப் பொருள்கள் பலவற்றையும் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். அவர் குறித்த சித்திரக் கதை நூல் இது.
தகப்பன் சாமி
எஸ்.பகவதி மோதிலால்
இனிய நந்தவனம் பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 94432 84823
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் எளிமையான கதைகளின் தொகுப்பு இந்நூல். 16 கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கதையும் அனுபவத்தில் விளைந்தவை.
தமிழக வருவாய்த் துறை மானியக் கோரிக்கை
தொகுப்பாசிரியர்: சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
பிராப்தம் ரியல் எஸ்டேட் அகாடமி வெளியீடு
விலை: ரூ.350
தொடர்புக்கு: 98416 65836
2013-2024 ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வருவாய்த் துறை சார்பாக விவாதிக்கப்பட்ட ஆவணங்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.
ஒளவை ஆத்திசூடி
தொகுப்பாசிரியர்: ஜெயந்தி ஆனந்தன்
சேத்தியாத்தோப்புத் தமிழ் மன்றம் வெளியீடு
விலை: ரூ.299
தொடர்புக்கு: 94451 22458
ஒளவையின் ஆத்திசூடி வரிகளைக் கருப்பொருளாகக் கொண்டு இயற்றப்பட்ட கதைகளின் தொகுப்பு இது. பேராசிரியர், ஆசிரியர், மாணவர், எழுத்தாளர் எனப் பலரின் கதைகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.