Last Updated : 02 Apr, 2014 03:03 PM

 

Published : 02 Apr 2014 03:03 PM
Last Updated : 02 Apr 2014 03:03 PM

திரைப்படம் என்னும் அற்புத மொழியின் வரலாறு

உலகமெங்கிலும் திரைப் படங்கள் பொது மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று திரைப்படம். திரைப்படத்துறையினர் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை உருவாக்கியுள்ளனர். சினிமா குறித்த செய்திகளையும் விவரங்களையும் அறிந்துகொள் வதில் மக்களுக்குத் தீராத விருப்பம் இருக்கிறது.

இதை உணர்ந்து திரைப்படங்கள் தொடர்பான நூல்கள் தமிழில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

மௌனமாகத் தனது பயணத்தைத் தொடங்கிய சினிமா நூறு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. டிஜிட்டல் சினிமாவின் உருவாக்கம் பரவி வருகிறது. இந்நிலையில் சினிமாவின் நூற்றாண்டு பயணத்தை விவரிக்கும் நூல் எம். சிவகுமாரின் சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு.

செம்மலர் இலக்கிய இதழில் இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஏற்கனவே ஹங்கேரி திரைப்பட இயக்குநரான பேல பெலாஸ் எழுதிய நூலை 80களின் தொடக்கத்திலேயே தமிழில் மொழிபெயர்த்தவர் எம் சிவகுமார்.

சினிமா கோட்பாடு என்னும் பெயரில் வெளியான அந்த நூல் திரைப்பட ஆர்வலர்களிடையேயும் ரசிகர்களிடையேயும் பரவலான கவனம் பெற்றது.

ஒரு சினிமாவின் கதை, திரைக் கதை உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களையும் விளக்க மாகவும் எளிய நடையிலும் விவரித் துள்ளார் சிவகுமார்.

தமிழ்த் திரைப்படங்கள், வெளி மாநில, வெளிநாட்டு திரைப்படங்கள், ஆவணப் படங்கள் என அத்தனை வகைகளையும் தொட்டுக்காட்டி சினிமா குறித்த புரிதலை வளர்த் தெடுக்கும் நோக்கில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

கையில் எடுத்தால் விறுவிறு வென வாசிக்க வைப்பதுடன் இதில் குறிப்பிட்ட படங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் ஏற்படுத்துகிறது எம் சிவகுமாரின் கட்டுரைகளின் பயணம்.

ரோமன் போலன்ஸ்கி, கிம் கி தக் போன்ற பல புகழ்பெற்ற இயக்குநர்களின் திரைப்படங்களின் தன்மை அலசப்பட்டுள்ளது. டிஜிட்டல் சினிமாவின் தாக்கத் தையும் ஆராய்ந்து எழுதியுள்ளார்.

திரைப்பட இயக்கங்கள் தொடர்பான செய்திகளையும் வாசகர்களுக்குக் கூறியுள்ளார் சிவகுமார்.

சினிமா ஆர்வலர்களின் விருப்பத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்னும் நோக்கமே இந்நூலின் அடிநாதம்.

சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு

எம். சிவகுமார், விலை ரூ.250, புதிய கோணம் 7, இளங்கோ சாலை, சென்னை- 600 018, தொலைபேசி: 2433 2424.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x