

இலங்கைத் தமிழர் நாவலுக்கு விருது: அமெரிக்க-இலங்கைத் தமிழ் எழுத்தாளரான வி.வி.கணேஷானந்தன் ‘லவ் மேரேஜ்’ (Love Marriage) நாவல் வழி அமெரிக்க இலக்கிய உலகில் கவனிக்கப்பட்டவர். இவர் பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார். இலங்கைப் போர்ச் சூழல் குறித்த இவரது ‘பிரதர்லெஸ் நைட்’ (Brotherless Night) நாவலுக்கு, வுமன் பிரைஸ் அறக்கட்டளை ஆண்டுதோறும் வழங்கும் வுமன் பிரைஸ் (புனைவு) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பரிசுத் தொகை இந்திய ரூபாயில் சுமார் 27 லட்சம்.
கவிதா சொக்கலிங்கம்-75 விழா: கவிதா பதிப்பக உரிமையாளர் கவிதா சொக்கலிங்கம் 75ஆம் ஆண்டு விழா நாளை (22.06.24) சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ராஜரத்தினம் கலையரங்கத்தில் மாலை 5 மணி அளவில் நடைபெறவுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நல்லி குப்புசாமி, பேரா. ம.ராஜேந்திரன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பேச்சாளர் பாரதி பாஸ்கர், பாடலாசிரியர் யுகபாரதி, அல்லயன்ஸ் னிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு கவிதா சொக்கலிங்கத்தின் பதிப்புப் பணிகள் பற்றி உரையாற்றவுள்ளனர்.