நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
2 min read

நீ உதிர்த்த சிறகின் பறவை
மீ.யூசுப் ஜாகிர்
மெளவல் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 97877 09687

தான் அனுபவித்த துரோகம், குற்றவுணர்வு ஆகியவை குறித்த பதிவுகளாக இந்தக் கவிதைகளைக் கவிஞர் எழுதியிருக்கிறார். காதல் கவிதைகள் தபூ சங்கரை நினைவுபடுத்துகின்றன.

ஒரு வரலாற்று ஆசிரியரின் வரலாறு
பேராசிரியர் அ.இராமசாமி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
விலை: ரூ.525
தொடர்புக்கு: 044 26251968

திமுக வரலாற்றை எழுதிய பேராசிரியர் அ.இராமசாமி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர். அவரது பொது வாழ்க்கையும் தனி வாழ்க்கையும் இந்த நூலில் சுவாரசியமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவைக் காப்போம்
எத்திராஜன் ராதாகிருஷ்ணன்
நர்மதா பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 98402 26661

இந்தியாவின் இன்றைய நிலையைத் திருத்தமாகச் சொல்லி, அதன் பிழைகளைக் களைவதற்கான யோசனைகளைச் சொல்கிறது இந்த நூல். ஒரு சமுதாயப் புரட்சிக்கான தேவையையும் நூல் முன்வைக்கிறது.

தமிழரும் தொழில்நுட்பமும்
ம.சுபாஷினி
மாணவர் வெற்றிப் பதிப்பகம்
விலை: ரூ.290
தொடர்புக்கு: soubasavithri@gmail.com

சங்க காலத்தில் தொழில்நுட்பம் குறித்த குறிப்புகளைக் கொண்டு கேள்விகளை எழுப்பிப் பதில்கள் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன. தொழில் முறைகள் எப்போது தோன்றின என்பன பற்றி இதில் சொல்லப்பட்டுள்ளது.

தென்னிந்தியத் திருமணச் சடங்குகள்
எட்கர் தர்ஸ்டன் (தமிழில்: வானதி)
சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 81480 66645

பிரிட்டிஷ் கால மானிடவியலாளரான எட்கர் தர்ஸ்டன் சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்தவர். அவர் எழுதிய இந்நூல் தென்னிந்தியத் திருமணங்களை மானிடவியல் தளத்தில் பதிவுசெய்கிறது.

கிடைத்த கொஞ்ச நேர ஓய்வில்...
ஆ.மணிவண்ணன்
தமிழ்மண் பதிப்பகம்
விலை: ரூ.265
தொடர்புக்கு: 94444 10654

காவல் துறை அதிகாரியான ஆ.மணிவண்ணன் தனது பரந்துபட்ட அனுபவத்தை ஆன்மிகம், பயணம், சமூகம் சார்ந்த கட்டுரைகளை இந்த நூலில் சுவாரசியமாக எழுதியுள்ளார்.

வடநாட்டுக் கோயிற் கலை
கோ.வீரபாண்டியன்
சத்யா எண்டர்பிரைசஸ்
விலை: ரூ.375
தொடர்புக்கு: 044 45074203

வட இந்தியக் கோயில்கள் தென்னிந்தியக் கோயில்களிலிருந்து வேறுபட்டவை. அவற்றின் உள்ளிருக்கும் நுட்பத்தைப் பிரசித்திபெற்ற கோயில்களை உதாரணமாகக் கொண்டு நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.

அம்மா ஆங் சான் சூச்சி
(மியான்மர் வரலாற்று நூல்)
மாதவரம் இரா.உதய்பாஸ்கர்
அசோக்குமார் பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 9940678478

மயன்மாரின் வரலாற்றைச் சொல்லும் நூல். அங்கு நடந்த சர்வாதிகார ஆட்சிக் காலத்தையும் நிலவும் இனப் பிரச்சினையையும் இந்த நூல் தெளிவாகச் சொல்கிறது.

விழுப்புரம் மாவட்டம்
கல் தோன்றிய காலம் முதல்
கோ.செங்குட்டுவன்
பி.எஸ்.பப்ளிகேஷன்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 99446 22046

சங்க இலக்கியம் தொடங்கிப் பல்லவர் காலம், சோழர் காலம், சம்புவராயர் காலம் என விழுப்புரத்தின் முழுமையான வரலாற்றைப் பேசும் நூல் இது. அதன் ஏரிகள், பண்பாட்டுச் சின்னங்கள் போன்றவை நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in