நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
3 min read

நம்ம பள்ளிக்கூடம் (நாவல்)
தஞ்சை வசந்தலெட்சுமி
குவிகம் பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 94425 25191

ஓர் அரசுப் பள்ளியின் பின்னணியில் எழுதப்பட்டது இந்த நாவல். மாணவர்களின் வருகை குறைந்துவருவதைச் சுட்டிக்காட்டி, அதை எப்படிச் சரிசெய்வது என்கிற கோணத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

நாகேஷைக் கேளுங்கள்
பேட்டி: எஸ்.வி.சேகர்
அல்லயன்ஸ் கம்பெனி
விலை: ரூ.120
தொடர்புக்கு: 92892 81314

நடிகர் நாகேஷிடம், நடிகர் எஸ்.வி.சேகர் கேட்ட கேள்விகளும் அதற்கான நாகேஷின் பதில்களும்தான் இந்தத் தொகுப்பு. சுவாரசியமான கேள்விகளும் புத்திசாலித்தனமும் துடுக்கும் நிறைந்த பதில்களும் வாசிப்புக்குச் சுவாரசியம் அளிக்கின்றன.

தாமிரபரணி தீரத்து சிறுகதைகள்
வீ.பழனி
அ ஆ இ பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 94433 91196

திருநெல்வேலி சார்ந்த கதைகளின் தொகுப்பு இந்நூல். தமிழ் வட்டார இலக்கியத்தில் சிறப்பான இடம் திருநெல்வேலிக்கு உண்டு. திருநெல்வேலி வட்டார வழக்கைச் சிலாகிக்கும் கதைகள் இவை.

சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
பதிப்பு: செம்பை சேவியர்
ஏஎம் பதிப்பகம்
விலை: ரூ.420
தொடர்புக்கு: 94443 58351

தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் எழுதிய கீர்த்தனைகள் இவை. பதிப்பாசிரியர் குறிப்புடன் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் தில்லை நடராஜர் - பொருள் விளக்கமும் தத்துவங்களும்
ஆடூர் ஆர்.வெங்கடேசன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 94440 47790

சிதம்பர ரகசியம் என்ற சொல் வழக்குத் தமிழ்நாட்டில் மிகப் பிரபலம். சிதம்பர ரகசியம் என்ன என்பதை இந்த நூல் விளக்குகிறது. இதுபோல் சிதம்பரம் நடராஜர் குறித்த பல அம்சங்களைச் சித்தரிக்கிறது இந்நூல்.

மேலப்பாளையமும் தமிழும்
செ.திவான்
ரெகான் - ரய்யா பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 90803 30200

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வாழ்ந்த முஸ்லிம் புலவர்களைப் பற்றியும் இறைநேசர்களைப் பற்றியும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. பழைய பிரதிகளையும் அச்சிட்டுச் சான்றுகளுடன் வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது.

அயோத்திப் பெருமாள்
தமிழ் மரபில் இராம கதை
கோகுல் சேஷாத்ரி
பழனியப்பா பிரதர்ஸ்
விலை: ரூ.400
தொடர்புக்கு: 73585 95111

ராம கதையின் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை ஆராயும் நூல் இது. சங்க காலத்திலிருந்து தொடங்கும் ஆய்வுச் சிற்பங்கள், கல்வெட்டுகள் போன்ற வலுவான சான்றுகளுடன் ஆய்வுப் பொருளை நிறுவ முயல்கிறது.

ஆகச் சிறந்த 50 மலையாள
சினிமா கதைகள்
பொன்.சுதா
நாதன் பதிப்பகம்
விலை: ரூ.240
தொடர்புக்கு: 98840 60274

சமீப காலத்தில் மலையாள சினிமாக்களுக்குத் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்துவருகிறது. இந்தச் சூழலில், இந்த நூல் மலையாளத்தின் சிறந்த படங்களை வாசகர்களுக்குப் பரிந்துரைக்கிறது.

சிப்பாய்ப் புரட்சியில் உயிர்த் தியாகம் செய்த விடுதலை வீரர்கள்
வி.என்.சாமி
வி.என்.சாமி வெளியீடு
விலை: ரூ.200
தொடர்புக்கு: 96297 61984

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான திருப்பம் சிப்பாய்ப் புரட்சி. இதற்குக் காரணமான வீரர்களை விரிவாக அறிமுகப்படுத்தியுள்ளார் பத்திரிகையாளர் வி.என்.சாமி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in