

தினம் ஒரு சுயமுன்னேற்ற
சிந்தனைத் தேன்
கமலா கந்தசாமி
நர்மதா பதிப்பகம்
விலை: ரூ.75
தொடர்புக்கு: 98402 26661
நெப்போலியன், பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற உலகப் புகழ்பெற்ற ஆளுமைகளின் மேற்கோள்களை மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் உச்சரித்து உற்சாகம் அடையும் விதத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
ஞாயிறு கடிதம்
கார்த்திக் சிதம்பரம்
நோஷன் பிரஸ்
விலை: ரூ.199
தொடர்புக்கு: contact@karthikchidambaram.com
இலக்கியம், எழுத்து, புத்தக நாள் எனப் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஒவ்வொரு வாரமும் இணையத்தில் எழுதிய கடிதங்களைத் தொகுத்துப் புத்தகம் ஆக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
கதை பேசும் காற்று
சுபி.முருகன்
மகிழினி பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 90951 67007
‘குடிசை வீட்டில் செளகரியமாக வாழ்கிறது வறுமை’ என்பது போன்ற ஹைக்கூ வடிவத்தை நினைவூட்டும்படியான கவிதைகளின் தொகுப்பு. கவிதையின் ஆங்கில வடிவமும் இத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது.
வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்!
கே.பாக்யராஜ்
ஜெய்ரிகி பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 86438 42772
புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியர் கே.பாக்யராஜ் தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். சினிமாவுக்குப் பின்னுள்ள ஒரு உலகம் இந்த விவரிப்பில் திறந்துகொள்கிறது.
தமிழ் - மலையாள நெய்தல் திணை நாவல்கள்
ஓர் ஒப்பீட்டாய்வு
பிரபாஹரன்.கே
கடற்கரை பதிப்பகம்
விலை: ரூ.240
தொடர்புக்கு: 88913 95421
தமிழ் - மலையாள நாவல்களில் பல கடற்புற வாழ்க்கையைப் பேசுகின்றன. ஜோ.டி.குரூஸின் ‘ஆழி சூழ் உலகு’, காலீதின் ‘ஒரே தேசக்காராய ஞங்கள்’ உள்ளிட்ட பல நாவல்களைச் சுட்டி ஆய்வு நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
கந்தர் அநுபூதி
உரை: மா.வே.நெல்லையப்பபிள்ளை
கவின் பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 73958 66699
அருணகிரிநாதர் எழுதிய கந்தர் அநுபூதி நூலுக்கு மா.வே.நெல்லையப்பர் எழுதிய உரையின் மறுபதிப்பு இது. பொ.ஆ. (கி.பி.) 1943இல் முதற்பதிப்பு கண்ட இந்நூல் உரைக்காக இன்றும் வாசிக்கப்படும் தொகுப்பாக இருக்கிறது.
புத்தகம் என்னவெல்லாம் செய்யும்?
சோம.வள்ளியப்பன்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.260
தொடர்புக்கு: 044 42009603
சோம.வள்ளியப்பன் எழுத்தாளராகத் தன் வாசகர்களைச் சந்தித்த அனுபவத்தை இந்நூலில் எழுதியிருக்கிறார். புத்தக வாசிப்பு, எழுத்தின் வழி பணம் சம்பாதித்தது எனப் பல விஷயங்களை இதில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தீம்பெயல்
ஹரணி
மெளவல் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 97877 09687
எளிமையான வாழ்க்கை அனுபவத்தை ஹரணி கதைகளாக எழுதியிருக்கிறார். நேரடியான மொழியிலான கதைகள், வாசகர்கள் நுழைவுக்கான சாத்தியத்துடன் உள்ளன.
சேது சீமை மாமன்னர்
ரகுநாத கிழவன் சேதுபதி
ஜெகாதா
நேஷனல் பப்ளிஷர்ஸ்
விலை: ரூ.340
தொடர்புக்கு: 94440 47786
ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி அரச வம்சம், தமிழ் அரச வம்சத்தினர்களில் நீண்ட ஆட்சிப் பாரம்பரியம் கொண்டது. இந்த வம்சத்தின் புகழ்பெற்ற மன்னர் ரகுநாத கிழவன் சேதுபதி குறித்த நூல் இது.
விடுதலை வேள்வியில் தியாகி விசுவநாததாசு
கப்பியறை வ.இராயப்பன்
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9840480232
நாடகக் கலைஞரும்
விடுதலைப் போராட்ட வீரருமான விஸ்வநாததாஸ் குறித்த நூல் இது. அவரது பங்களிப்பு, குடும்பப் பின்னணி குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.