நூல் வரிசை

நூல் வரிசை
Updated on
2 min read

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
பரிசுப் பதிப்பு
அருணா வெளியீடு
விலை: ரூ.350
தொடர்புக்கு: 9444047790

பாரதிக்குப் பிறகு தமிழில் கவனம் பெற்ற கவிஞர் பாரதிதாசன், ஓசை ஒழுங்கும் அரசியல் காத்திரமும் உள்ள கவிதைகளை எழுதியவர். இவரது கவிதைகளின் தொகுப்பு இது.

குமுறும் நெஞ்சம்
இ.ஜே.சுந்தர்
ரிதம் வெளியீடு
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9841068832

நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிர்வினையாகவும் சமூகக் கற்பிதங்களை விமர்சித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. இதனுடன் அரிய தகவல்களையும் கட்டுரையாளர் தருகிறார்.

வெற்றியாளர்கள் வாசிக்கவும்
நா.சங்கரராமன்
விஜயா பதிப்பகம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 9047087053

வாழ்க்கையின் உண்மையான வெற்றி எது, அதை அடையும் மார்க்கம் என்ன என இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன. எளிய வகையில் கதை, வரலாற்றுச் சம்பவங்களுடன் தெளிவாக எழுதப்பட்டுள்ளன இந்தக் கட்டுரைகள்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
எம்.நாராயண வேலுப்பிள்ளை
நர்மதா வெளியீடு
விலை: ரூ.80
தொடர்புக்கு: 9840226661

சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட நாலடியார், திருக்குறள், இன்னா நாற்பது, இனியவை நாற்பது உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த அறிமுக நூல்.

நான்கில் ஒரு காலம்
மேகவண்ணன்
கருப்புப் பிரதிகள்
விலை: ரூ.90
தொடர்புக்கு: 9444272500

எளிமையான மொழியில் அமைந்த கவிதைகள் இவை. சமூக நிகழ்வை, அன்றாடத்தின் நுட்பத்தை இந்தக் கவிதைகள் பதிவுசெய்கின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in