

இணை
பூமா ஈஸ்வரமூர்த்தி
உயிர்மை பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 044 48586727
கவிஞராக அறியப்பட்ட பூமா ஈஸ்வரமூர்த்தியின் சிறுகதைத் தொகுப்பு. வாழ்க்கைக்குள் ஒளிந்திருக்கும் அபூர்வமான அம்சங்களை இக்கதைகள் வழி இயல்பான மொழியில் பூமா சித்தரித்துள்ளார்.
இலிங்காயத்துகள் இனவரைவியல் ஆய்வு
பெ.கோவிந்தசாமி
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.140
தொடர்புக்கு: 9840480232
லிங்காயத்துகள் தமிழ்நாட்டில் பர்கூர் மலைப் பகுதியில் வாழும் கன்னடம் பேசும் இனத்தவர். நிலம் சார்ந்த அவர்களது வாழ்க்கை, அவர்களின் பயன்பாட்டு மொழி எனப் பல அம்சங்களை இந்த நூல் ஆவணப்படுத்தியுள்ளது.
ஆய்வுகளின் அணிவகுப்பு
ஜெ.சசிகலா
மதுமதி பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9952573481
கல்விச் சிந்தனை, பாரதியின் பெண்ணியச் சிந்தனைகள், நாட்டார் இலக்கியம், தமிழும் திராவிட மொழிகளும், தமிழ்ப் பண்பாடு போன்ற பல்வேறு பொருளை ஆராயும் கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இது.
ஹக்கீம் அஜ்மல்கான் எனும் சமூக மருத்துவர்
ஆர்.வெங்கடேசன்
கற்க கசடற பதிப்பகம்
விலை: ரூ.50
தொடர்புக்கு: 8072087341
யுனானி மருத்துவத்தின் முன்னோடியான ஹக்கீம் அஜ்மல்கான், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கத்தையும் தாண்டி, யுனானி மருத்துவத்தை முன்னெடுத்தவர். இந்திய சுதந்திரப் போராட்ட வீரருமான இவரைக் குறித்த நூல் இது.
கிரீன் பப்பாயா
இளங்கவி அருள்
கடல் பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 9789009666
இதுவரை 11 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளவரின் தொகுப்பு இது. தான் அனுபவித்ததைக் கவிதையாக்கும் இவரது முயற்சி இதிலும் வெளிப்பட்டுள்ளது.
ஆளுமை வளர்க்கும் நாட்டுப்புறச் சிறார் விளையாட்டுகள்
பல்லவிகுமார்
தமிழ்ப் பல்லவி வெளியீடு
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9942347079
திறன்பேசிப் பயன்பாடு பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், சிறார் அதில்தான் விளையாடுகிறார்கள். இந்தப் பின்னணியில் நமது பாரம்பரியச் சிறார் விளையாட்டுகளை நினைவூட்டுகிறது இந்நூல்.
குரலி
அண்டனூர் சுரா
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
விலை: ரூ.150
தொடர்புக்கு: 044 26251968
திடமான கருப்பொருளில் விளைந்த கதைகள் இவை. அரசியல் பிடிப்பும் இந்தக் கதைகளுக்கு உண்டு. அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி மொழிந்த வகிபாகம் என்கிற சொல், இதன் தலைப்புக் கதையில் கையாளப்பட்டுள்ளது சிறப்பானது.
கண்ணாடி மாளிகை
சுபாஷ் சந்திரன் (தமிழில்: ச.சுந்தரராமன்)
எழிலினி பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 9840696574
சிறார்களுக்கு நல்ல மார்க்கத்தைக் காட்டும் கதைகள் இவை. சிறார்களுக்கு நம்பிக்கையூட்டித் திறன் பெறவும் இதிலுள்ள கதைகள் உத்வேகம் அளிக்கின்றன.
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
சி.எஸ்.தேவ்நாத்
நர்மதா வெளியீடு
விலை: ரூ.80
தொடர்புக்கு: 9840226661
சாணக்கியர் என அடிக்கடி நாம் பயன்படுத்தும் ஆளுமை யார், அவர் மொழிந்த சாஸ்திரம் என்ன என்பதைப் பற்றி இந்த நூல் விரிவாகச் சித்தரிக்கிறது.
நாட்டுப்புறப் பாடல்கள்
சாமி பிச்சைப்பிள்ளை அறவணன்
பூம்பொழில் வெளியீடு
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9884773781
தொழிற்பாட்டு, காதல் பாட்டு, ஒப்பாரிப் பாட்டு எனப் பலவிதமான நாட்டார் பாடல்களைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர். பாட்டின் கட்டமைப்பு குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.